1908 ஆம் ஆண்டு தில்லியை தலைமையிடமாகக் கொண்டு தொடங்கப்பட்டது பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி. நாடு முழுவதும் பல்வேறு கிளைகளுடன் நிதி சேவைகளை வழங்கி வரும் பொதுத்துறை முன்னணி வங்கிகளில் ஒன்றாகும். தற்போது இந்த வங்கியில் 1000 உள்ளூர் அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள பட்டதாரி இளைஞற்களிடம் இருந்து வரும் 20 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: உள்ளூர் அலுவலர் (Local Bank Officer)
காலியிடங்கள்: 1000 (தமிழ்நாடிற்கு 65 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது)
மாநிலங்கள் வாரியாந காலியிடங்கள் விவரம்:
அஸ்ஸாம் - 50, அருணாச்சலப்பிரதேசம் - 15, உத்தரப்பிரதேசம் - 200, சத்தீஸ்கர் - 80, ஹிமாச்சலப் பிரதேசம் - 20, ஜார்க்கண்ட் - 10, குஜராத் - 125, கர்நாடகம் - 60, கேரளம் - 10, தெலங்கானா - 30, மத்தியப்பிரதேசம்- 60, மகாராஷ்டிரம் - 60, ஒடிசா - 80, நாகாலாந்து - 5, மேற்குவங்கம் - 30, பஞ்சாப் - 100, தமிழ்நாடு - 65
சம்பளம்: மாதம் ரூ.48,480 - 85,920
வயதுவரம்பு: 1.3.2026 தேதியின்படி 20 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு பத்தாண்டுகள் சலுகை வழங்கப்படும்.
தகுதி: ஏதாவதொரு பாடத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வணிக வங்கிகள், நிதிநிறுவனங்கள் என வங்கி சார்ந்த பணிகளில் குறைந்தது 18 மாதங்கள் பணிஅனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் பணிபுரிய விரும்பும் மாநிலத்தின் அலுவலக மொழியில் பேச, எழுத தெரிந்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் முறையில் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள்தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வு நடை பெறும் இடம், தேதி குறித்த விபரம் அடங்கிய நுழைவுச்சீட்டு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
தேர்வு நடைபெறும் இடங்கள்: தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, சேலம், நாகர்கோவில், விருதுநகர்.
எழுத்துத் தேர்வில் English Language, Banking Knowledge, General Knowledge, General Awareness, Computer Aptitude போன்ற பாடப்பிரிவுகளிலிருந்து 120 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள எழுத்துத் தேர்விற்கான பாடத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸடி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு ரூ.100 மட்டும். இதர அநைத்து பிரிவினர்களுக்கு ரூ.850. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.punjabandsind.bank.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 20.4.2026
Summary
punjab and sind bank RECRUITMENT OF 1000 LOCAL BANK OFFICERS post
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மிஸ்பண்ணிடாதீங்க... இந்தியன் வங்கியில் 350 சிறப்பு அலுவலர் பணி!

ரூ.1,40,000 சம்பளத்தில் ரயில் டெல் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகள் வாய்ப்பு!

பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர் கவனத்துக்கு! கணக்கு மூடப்படலாம்?

வங்கியில் வேலை வேண்டுமா..? உடனே விண்ணப்பிக்கவும்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



