மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறையில் வேலைவாய்ப்பு!

வரும் நவ. 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

News image
தமிழக அரசு
Updated On :22 நவம்பர் 2024, 2:24 am

DIN

தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறையில் தற்காலிக பணிக்கு இரண்டு நபர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு துறையில் "System Analyst cum Data Manager" என்னும் முற்றிலும் தற்காலிக பணிக்கு இரண்டு நபர்களை தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான விண்ணப்ப படிவங்கள் மற்றும் தேவையான கல்வித் தகுதி விவரங்கள் https://foodsafety.tn.gov.in/api/media/notification_files/System_Analyst_Cum_Data_Mana ger.pdf என்னும் இணைய தள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

எனவே, தகுதி வாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிக்கு அதற்காக கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் புகைப்படத்துடன் (Passport Size) 28.11.2024 அன்று மாலை 5.00 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ ஆணையர் அலுவலகம், உணவு பாதுகாப்புத் துறை, முதல் மற்றும் இரண்டாம் தளம், பழைய மீன்வளத்துறை அலுவலக கட்டிடம். டி.எம்.எஸ் வளாகம், 359, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை-6 என்ற முகவரியில் கிடைக்கப் பெற வேண்டும்.

முறையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட கால அளவிற்கு பின்பு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து துறையின் முடிவே இறுதியானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.