சென்னை வடபழநி அருள்மிகு ஆண்டவர் திருக்கோயிலில் நிரப்பப்பட உள்ள 23 இளநிலை உதவியாளர், தட்டச்சர் போன்ற பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இந்து சமயத்தை சார்ந்தவர்களிடம் இருந்து வரும் அக்டோபர் 4 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: இளநிலை உதவியாளர் - 04
சம்பளம்: மாதம் ரூ.18,500 - 58,600
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிகப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.
பணி: தட்டச்சர் - 01
சம்பளம்: மாதம் ரூ.18,500 - 58,600
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். அரசு தொழில்நுட்ப தட்டச்சர் தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுநிலை அல்லது தமிழில் முதுநிலை மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: ஓட்டுநர் - 01
சம்பளம்: மாதம் ரூ.18,500 - 58,600
தகுதி: எட்டாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகனம் அல்லது கனரக வாகனம் ஓட்டுநர் உரிமம் முதலுதவி குறித்த சான்றிதழும் பெற்றிருப்பதுடன் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: உதவி மின் பணியாளர் - 01
சம்பளம்: மாதம் ரூ.16,600 - 52,400
தகுதி: மின்கம்பி பணியாளர் பிரிவில் ஐடிஐ முடித்து மின் உரிமம் வழங்கல் வாரியத்திடமிருந்து 'எச்' சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பணி: நாதஸ்வரம்
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000
தகுதி: தமிழ் மொழியில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். யாதொரு சமய நிறுவனங்களால் அல்லது அரசு நிறுவனங்களால் அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் இசைப் பள்ளிகளில் இருந்து தொடர்புடைய துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பணி: உதவி அர்ச்சகர் - 9
சம்பளம்: மாதம் ரூ.15,900 - 50,400
தகுதி: தமிழில் எழுத, படிக்க தெரிந்திருப்பதுடன் ஆகமப்பள்ளி அல்லது வேதபாடச்சாலையில் தொடர்புடைய துறையில் ஒரு ஆண்டு படிப்பினை மேற்கொண்டதற்கான சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.
பணி: உதவி பரிச்சாரகம் - 2
சம்பளம்: மாதம் ரூ.10,000 - 31,500
தகுதி: தமிழ் மொழியில் எழு, படிக்க தெரிந்திருக்க வேண்டும் மற்றும் கோயில்களின் பழக்க வழக்கங்களுக்குக் கேற்ப நெய்வேத்தியம் மற்றும் பிரசாதம் தயாரிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
பணி: வேதபாராயணம் - 2
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
தகுதி: தமிழ் மொழியில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும் மற்றும் ஆகமப்பள்ளி அல்லது வேடபாடசாலைகளில் தொடர்புடைய துறையில் குறைந்தபட்சம் மூன்றாண்டு படிப்பினை மேற்கொண்டதற்கான சான்றிதழை பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.09.2022 தேதியின்படி 18 பூர்த்தியடைந்து 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://hrce.tn.gov.in/ என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
துணை ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில், வடபழநி, சென்னை -26
விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 04.10.2022
மேலும் விவரங்கள் அறிய https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/137/document_1.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
Related Article
ராணுவ பொதுப் பள்ளிகளில் 8 ஆயிரம் ஆசிரியர் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு
பொதுத்துறை நிறுவனத்தில் டெக்னீசியன் வேலை: விண்ணப்பிப்பது எப்போது..? எப்படி..?
ரூ.62 ஆயிரம் சம்பளத்தில் மாவட்ட நீதிமன்றத்தில் தட்டச்சர், சுருக்கெழுத்தர் பணி
ரூ.25,000 சம்பளத்தில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலை: விண்ணப்பிக்க தகுதிகள் என்ன?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கத்தரி வெய்யில்: என்ன செய்யலாம், எதைத் தவிர்க்கலாம்!
நம்பிக்கை இருந்தால் அதிசயம் நடக்கும்: சூர்யா

சூடம்மாள் அம்மன் சிலை மீது சூரிய ஒளி படும் அபூர்வ காட்சி

ஹீட் ஸ்ட்ரோக் - அறிகுறிகள் என்ன? தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


