மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

குரூப் 5ஏ தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு

தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணி தொகுதி- 5ஏ இல் அடங்கிய உதவிப் பிரிவு அலுவலர், உதவியாளர் பணிகளுக்கான எழுத்துத் தேர்விற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2022, 8:13 am


தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணி தொகுதி- 5ஏ இல் அடங்கிய உதவிப் பிரிவு அலுவலர், உதவியாளர் பணிகளுக்கான எழுத்துத் தேர்விற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து செப்டம்பர் 21 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: உதவிப் பிரிவு அலுவலர் - 74
பணி: உதவிப் பிரிவு அலுவலர் - 29
சம்பளம்: மாதம் ரூ.36,400 - 1,34,200

பணி: உதவியாளர், தலைமைச் செயலகம் - 49
பணி: உதவியாளர் - 09
சம்பளம்: மாதம் ரூ.20,000 - 73,700

தகுதி: வணிகவியல், பொருளாதாரம், புள்ளியியல் போன்ற ஏதாவதொரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: எஸ்சி, எஸ்டி பிரிவினர் 40க்குள்ளும், பிற பிரிவினர் 35க்குள்ளும் இருக்க வேண்டும்.

கட்டணம்:  நிரந்தரப் பதிவுக் கட்டணம் ரூ.150, தேர்வுக் கட்டணம் ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.  நிரந்த பதிவில் பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிவுறாத விண்ணப்பத்தாரர்கள் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டாம். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். சலுகை விவரங்களை அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வில் பெறப்படும் மதிப்பெண்கள் மற்றும் பணி நியமனங்களுக்கான இடஒதுக்கீடு விதி அடிப்படையில் தகுதியான விண்ணப்பத்தாரர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும்.

எழுத்துத் தேர்வு மையம்: சென்னை மையத்தில் மட்டுமே நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnpscexams.in/ www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
 
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: தாள்-I பொதுத் தமிழ் 18.12.2022 அன்று காலை 9.30 முதல் 12.30 மணி வரை.  தாள்-II பொது ஆங்கிலம் பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.09.2022

மேலும் விவரங்கள் அறிய https://tnpsc.gov.in/Document/tamil/21_2022_Group_V_A_Notfn_Tamil.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
 

Related Article

வேலைக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா? 4300 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

இளநிலை பொறியாளர் தேர்வு-2022: எஸ்எஸ்சி புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா..? விண்ணப்பிக்க இன்றே கடைசி!

இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி ?

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.60 ஆயிரம் சம்பளத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.