நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம்! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

மே 15-ல் வெளியாகிறது இயக்குநர் சற்குணத்தின் புதிய இணையத் தொடர்!

தேசிய விருது வென்ற இயக்குநர் சற்குணம் இயக்கியுள்ள புதிய இணையத் தொடர் குறித்து...

News image

எக்ஸாம் இணையத் தொடர் போஸ்டர் - எக்ஸ்

Updated On :27 ஏப்ரல் 2026, 1:13 pm

தேசிய விருது வென்ற இயக்குநர் சற்குணம் இயக்கியுள்ள எக்ஸாம் இணையத் தொடர் மே 15 ஆம் தேதி நேரடியாக அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரியின் வால்வாட்சர் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த இணையத் தொடரில், துஷாரா விஜயன், அதிதி பாலன் மற்றும் அப்பாஸ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

உலகெங்கிலும் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் தமிழில் வெளியாகும். இத்திரைப்படம் தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டும், ஆங்கிலம் உட்பட 15 மொழிகளில் சப்டைட்டில்களுடனும் வெளிவரும்.

பரபரப்பு திருப்பங்கள் நிறைந்த நாடகமாக உருவாகியுள்ள எக்ஸாம் இணையத் தொடர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகிறது. இதுமட்டுமின்றி ஆங்கிலம் உள்பட 15 மொழிகளில் சப் டைட்டில்ஸ் அமைக்கப்பட்டுள்ளது.

7 எபிஸோடுகள் உடைய எக்ஸாம் இணையத் தொடர் 240 நாடுகளில் நேரடியாக மே 15 ஆம் தேதி முதல் வெளியாகிறது.

அமேசான் பிரைம் இந்தியாவின் தலைவர் மற்றும் இயக்குநரான நிகில் மோதக் இது குறித்து பேசியதாவது: 'எக்ஸாம்' என்பது, போட்டித் தேர்வுகளின் உணர்ச்சித் தீவிரத்தை மிகத் திறமையாகப் படம்பிடித்து, அதை ஒரு விறுவிறுப்பான, பெரும் சவால்கள் நிறைந்த நாடகமாக மாற்றியமைக்கும், ஒரு சிறந்த கதையாகும்.

இக்கதை கோடிக்கணக்கான மக்களின் மனதில் ஆழமாகப் பதியும் என்று நாங்கள் நம்புகிறோம். சுழல் சீசன் 1 மற்றும் 2, மற்றும் வதந்தி ஆகியவற்றின் வெற்றிக்குப் பிறகு, புஷ்கர் - காயத்ரியுடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவது எங்களுக்குக் கிடைத்த ஒரு பாக்கியம்.

இந்தக் கதையை மே 15 ஆம் தேதி உலகெங்கிலும் உள்ள எங்கள் வாடிக்கையாளர்களுக்குக் கொண்டு வருவதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Summary

Director Sargunams Exam web series releases on May 15th

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.