ஆவின்பால் நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?
கிருஷ்ணகிரி மாவட்ட ஆவின்பால் கூட்டுறவு சங்கத்தில் நிரப்பப்பட உள்ள Deputy Manager, Private secretary மற்றும் Jr. Executive பணியிடங்களுக்கான அறிவிப்பு


கிருஷ்ணகிரி மாவட்ட ஆவின்பால் கூட்டுறவு சங்கத்தில் நிரப்பப்பட உள்ள Deputy Manager, Private secretary மற்றும் Jr. Executive பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், பணி அனுபவமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Deputy Manager (Civil) - 01
சம்பளம்: மாதம் ரூ.35,900 - 1,13,500
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Private secretary Grade III - 01
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 65,600
தகுதி: ஏதாவெதாரு துறையில் பட்டம் பெற்று ஆங்கில தட்டச்சில் முதுநிலையும், தமிழில் இளநிலை மற்றும் சுருக்கெழுத்தில் ஆங்கிலத்தில் முதுநிலையும், தமிழில் இளநிலையும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: Jr. Executive (Typing) - 01
சம்பளம்: மாதம் ரூ. 19,500 - 62,000
தகுதி: ஏதாதொரு துறையில் பட்டம் பெற்றும் ஆங்கிலம் மற்றும் தமிழ் தட்டச்சில் முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி OC பிரிவினர் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மற்ற பிரிவுகளைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்களுக்கு குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும் அதிகபட்ச வயவரம்பு இல்லை.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் வாய்மொழித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: OC, MBC, BC பிரிவினர் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். மற்ற பிரிவினர் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.aavinmilk.com அல்லது aavindpi@g.mail.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Krishnagiri District Co-operative Milk Producers’ Union Ltd, Kannakamutlu (PO) Krishnagiri.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 26.11.2019
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...