/

ஆவின் நிறுவனத்தில் வேலை வேண்டுமா? யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்...

தமிழக அரசின் பால்வளத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனத்தின் சேலம் கிளையில் காலியாக உள்ள மேலாளர், ஓட்டுநர் உள்ளிட்ட

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:16 am

ஆர். வெங்கடேசன்


தமிழக அரசின் பால்வளத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனத்தின் சேலம் கிளையில் காலியாக உள்ள மேலாளர், ஓட்டுநர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Heavy Vehicle Driver
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.19,500
தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Deputy Manager(Civil)
காலியிடம்: 01
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.35,900 

விண்ணப்பக் கட்டணம்: ஓசி, எம்பிசி, பிசி விண்ணப்பதாரர்கள் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: http://www.aavinmilk.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து பதிவு, விரைவு அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
The General Manager,The Salem District Co-op. Milk Producers' Union Ltd, Sithanur, Dhalavaipatty, Salem 636302

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி தேதி: 24.6.2019

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://aavinmilk.com/career-view?url=/documents/20142/0/cdslm110619+%281%29.pdf/61550d25-1d19-ac18-6151-74a4a52b5b0f&noticeURL=/documents/20142/0/cnslm100619+%281%29.pdf/98218db6-6875-765b-313e-3883a9dafa87&noticeName= என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.