ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் உச்ச நீதிமன்றத்தில் கிளார்க் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்..?
இந்தியாவின் முதன்மை நீதிமன்றமான உச்ச நீதிமன்றத்தில் ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள Law Clerk-cum-Research Assistant பணியிடங்களுக்கு


இந்தியாவின் முதன்மை நீதிமன்றமான உச்ச நீதிமன்றத்தில் ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள Law Clerk-cum-Research Assistant பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Law Clerk-cum-Research Assistant
சம்பளம்: மாதம் ரூ.50,000
வயதுவரம்பு: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: சட்டத்துறையில் ஏதாவதொன்றில் இளங்கலை பட்டம் பெற்று இந்திய பார் கவுன்சிலில் வழக்குரைஞராக பதிவு செய்திருக்க வேண்டும். கணினியில் பணிபுரியும் திறனும் பெற்றிருக்க வேண்டும். இதற்கு 5 வருட ஒருங்கிணைந்த சட்ட படிப்பு இறுதியாண்டு மாணவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு மையம்: தில்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை ஆன்லைன் முறையில் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.sci.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.02.2019
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.sci.gov.in/pdf/recruitment/advt_lawclerk2019-Website.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...