தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

ஆவின் நிறுவனத்தில் வேலை வேண்டுமா? 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்!

தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் (ஆவின்) திருச்சியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:09 am

ஆர். வெங்கடேசன்


தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் (ஆவின்) திருச்சியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிர்வாகம்: திருச்சி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் (ஆவின்) 

மொத்த காலியிடங்கள்: 13

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: ஓட்டுநர் - 04 
தகுதி: 8-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 5200 - 20,200

பணி: துணை மேலாளர் - 04 
தகுதி: மேலாண்மை, நிர்வாகம் போன்ற துறைகளில் பிபிஏ, எம்பிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 
சம்பளம்: மாதம் ரூ. 9,300 - ரூ.34,800

பணி: மேலாளர் - 05 
தகுதி: எம்பிஏ, கால்நடை மருத்துவத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 39,100 
வயது வரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்டி, எஸ்சி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: www.aavinmilk.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The General Manager, Tiruchirappalli District Co-operative Milk Producers' Union Limited, Pudukkottai Road, Kottapattu Trichy - 620 023.

மேலும் விபரங்களை அறிய http://www.aavinmilk.com/hrtryapp050219.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 22.02.2019

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.