சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

லேப் டெக்னீசியன், செவிலியர் வேலை வேண்டுமா? அழைக்கிறது ஜிப்மர்

புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உள்ள லேப் டெக்னீசியன், செவிலியர் பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பை

News image
Updated On :31 ஜனவரி 2024, 1:39 pm

ஆர். வெங்கடேசன்


புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உள்ள லேப் டெக்னீசியன், செவிலியர் பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Nursing Officer
பணி: Medical Laboratory Technologist
பணி: Physical Instructor
பணி: Psychiatric Nurse
பணி: Junior Engineer (Air Conditioning)
பணி: Electronics Assistant(workshop)
பணி: EEG Technician
பணி: Uro Technician
பணி: Dental Mechanic

வயதுவரம்பு: 30 முதல் 35 வயதுவரை உள்ளவர்கள் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. நர்சிங் பிரிவில் இளங்கலை, முடித்து இந்திய நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருப்பவர்கள், எம்எல்எஸ் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்று 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள், 10, பிளஸ் 2 தேர்ச்சியுடன் உடற்கல்வி பிரிவில் இளங்கலை பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றவர்கள், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்கல் பிரிவில் பட்டம் அல்லது டிப்ளமோ பெற்றவர்கள், பிளஸ் 2 தேர்ச்சியுடன் இஇஜி பிரிவில் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்கள்,  ரேடியோகிராபி, ரேடியோகிராபி அறிவியல் பிரிவில் டிப்ளமோ முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் அல்லது இளங்கலை பட்டம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 23.02.2020

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1500. எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.1200 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகள் கட்டணங்கள் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: www.jipmer.edu.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனை கைவசம் வைத்துக்கொள்ளவும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.jipmer.edu.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.01.2020

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.