டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு: தொழிலாளர் உதவி ஆணையாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
தமிழ்நாடு தொழிலாளர் துறையில் 2013-14, 2015-16 மற்றும் 2016-17-ஆம் ஆண்டிற்கான காலியாக உள்ள 10 தொழிலாளர் உதவி ஆணையாளர்


தமிழ்நாடு தொழிலாளர் துறையில் 2013-14, 2015-16 மற்றும் 2016-17-ஆம் ஆண்டிற்கான காலியாக உள்ள 10 தொழிலாளர் உதவி ஆணையாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் நேற்று (ஜன.12) வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் பிப்ரவரி 11க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Assistant Commissioner of Labour (Formerly named as Labour Officer)
காலியிடங்கள்: 10
தகுதி: தொழிலாளர் மேலாண்மையில் எம்.ஏ,, எம்எல்எம் அல்லது ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று சமூக சேவையில் டிப்ளமோ, தொழிலாளர் நலம் மற்றும் நிர்வாகம் சட்டத்தில் டிப்பளமோ முடித்தவர்கள் அல்லது முதுகலை டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
சம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,77,500 வழங்கப்படும்.
கட்டணம்: பதிவுக் கட்டணமாக ரூ.150, தேர்வுக் கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும். ஏற்கனவே, பதிவுக்கட்டணம் செலுத்தியவர்கள் பதிவுக்கட்டணம் செலுத்த வேண்டாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in / www.tnpscexams.net / www.tnpscexams.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.02.2018
விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 13.02.2018
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதிகள்: தாள் - 1: 29.04.2018 அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையும், தாள் - II 29.04.2018 அன்று மதியம் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/2018_01_asst_comm_labour_officer.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...