டிப்ளமோ, பட்டதாரிகளுக்கு அட்வான்ஸ்டு டிரெய்னிங் இன்ஸ்டிடியூட்டில் வேலை
சென்னையில் செயல்பட்டு வரும் அட்வான்ஸ்டு டிரெய்னிங் இன்ஸ்டிடியூட்டில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள இளநிலை ஆலோசகர்


மத்திய அரசின் திறன் உருவாக்கம் மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் கீழ் சென்னையில் செயல்பட்டு வரும் அட்வான்ஸ்டு டிரெய்னிங் இன்ஸ்டிடியூட்டில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள இளநிலை ஆலோசகர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி: இளநிலை ஆலோசகர்
கல்வித் தகுதி விவரம்:
பொறியியல் படிப்பு சார்ந்தது: மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், எலெக்ட்ரானிக்ஸ் & இன்ஸ்ட்ரூமெண்டேஷன், எலெக்ட்ரிக்கல், சிவில் என்ஜினியரிங் படிப்புகளில் பி.ஈ அல்லது பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பொறியியல் படிப்பு சாராதது: ஃபேஷன், ஆபேரல் டிசைன், காஸ்ட்யூம் டிசைன், டிரெஸ் மேக்கிங், கார்பெண்ட் ஃபேப்ரிகேஷன் டெக்னாலஜி படிப்புகளில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 2 ஆண்டுகள் பணி அனுபவம் தேவை. மேற்கண்ட பிரிவுகளில் டிப்ளமோ முடித்தவர்கள் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
காலம்: 1 ஆண்டு மீண்டும் ஓர் ஆண்டு நீட்டிக்கப்பட கூடியது.
சம்பளம்: தொகுப்பூதியமாக மாதம் ரூ.30,000.
விண்ணப்பிக்கும் முறை: www.atichennai.org.in என்ற இணையதளத்துக்குச் சென்று விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
முகவரி: The Director, Advanced Training Institute, 10, Alandur Road, Chennai - 600032.
பூர்த்திய செய்யப்பட்ட விண்ணப்பம் சென்று சேர கடைசித் தேதி: 20.02.2018.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.atichennai.org.in/mediawiki116/index.php/Announcement#ENGAGEMENT_OF_JUNIOR_CONSULTANT_AT_ADVANCED_TRAINING_INSTITUTE_CHENNAI என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...