முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

பரோடா வங்கியில் அதிகாரி  வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

வங்கியில் பணியில் சேருவதே லட்சியமாகக் கொண்டுள்ள இளைஞர்களுக்கு ஒரு வாய்ப்பாக பரோடா வங்கியில் 913 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான

News image
Updated On :30 ஜனவரி 2024, 5:57 pm

ஆர். வெங்கடேசன்

வங்கியில் பணியில் சேருவதே லட்சியமாகக் கொண்டுள்ள இளைஞர்களுக்கு ஒரு வாய்ப்பாக பரோடா வங்கியில் 913 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 913

பதவி: Specialist Officers

துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 
துறை: Legal  - 20
துறை: Legal -  40 
தகுதி: சட்டத்துறையில் இளங்கலை பட்டம் பெற்று 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 25 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.42,020 - 51,490
 
துறை: Wealth Management Services - Sales - 150 
துறை: Wealth Management Services - Operations - 01

தகுதி: Marketing, Sales, Retail, Finance துறையில் 2 ஆண்டு முதுகலை, முதுகலை டிப்பளமோ அல்லது ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்று Banking, Finance துறையில் ஒரு ஆண்டு டிப்ளமோ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் 4 மற்றும் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.31,705 - ரூ.45,950

துறை: Wealth Management Services - Sales - 700
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

துறை: Wealth Management Services - Operations - 02
தகுதி: Marketing, Sales, Retail துறையில் 2 ஆண்டு முதுகலை, முதுகலை டிப்ளமோ முடித்து 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு, குழுவிவாதம், நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. எஸ்டி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.bankofbaroda.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.bankofbaroda.com/writereaddata/Images/pdf/Detailed-Notification-Specialist-Officers-2019-2020-Legal-WMS.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.12.2018

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.