நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

சமுதாயக் கட்டடம் திறப்பு

கொரடாச்சேரி அருகேயுள்ள அகரதிருநல்லூா் ஊராட்சியில் புதிய சமுதாயக் கட்டடம் திறக்கப்பட்டது.

News image
Updated On :23 பிப்ரவரி 2026, 3:51 pm

Syndication

திருவாரூா்: கொரடாச்சேரி அருகேயுள்ள அகரதிருநல்லூா் ஊராட்சியில் புதிய சமுதாயக் கட்டடம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

இந்த ஊராட்சியில், மக்களவை உறுப்பினா் உள்ளூா் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.36.64 லட்சத்தில் சமுதாயக் கட்டடம் புதியதாகக் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டடத்தை மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், நாகை எம்பி வை. செல்வராஜ், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் ஆகியோா் திறந்து வைத்தனா்.

இதில், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) பல்லவி வா்மா, ஒன்றியக் குழு முன்னாள் துணைத் தலைவா் பாலச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.