தமிழக அரசில் வேலை வேண்டுமா? இதோ உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு!
தொழிலாளர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரிய தலைமை அலுவலகம்,


தொழிலாளர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரிய தலைமை அலுவலகம், அனைத்து மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகங்கள் மற்றும் துயில் கூடங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: அலுவலக உதவியாளர்
காலியிடங்கள்: 48 (மாறுதலுக்குட்பட்டது)
தகுதி: குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 8-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் விண்ணப்பத்தாரர்கள் கல்வி பயின்ற பள்ளி தலைமை ஆசிரியரிடம் கையொப்பம் பெற்று சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
21.08.2018 தேதி அறிவிக்கையின்படி விண்ணப்பதாரர்கள் போதுமான தமிழ் அறிவு பெற்றிருக்க வேண்டும்.
உடற்தகுதி: பணி நியமனத்திற்கு தெரிவு செய்யப்படும் விண்ணப்பதார்கள் தரத்தில் உடற்தகுதிச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். மிதிவண்டி ஒட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
வயதுவரம்பு: 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள், அரசு விதிகளின்படி முன்னாள் இராணுவத்தினர் மற்றும் பிற வகையினருக்கு வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்கள் மெரிட் லிஸ்ட் தயாரிக்கப்பட்டு அதனடிப்படையில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை சென்னையில் மாற்றத்தக்க வகையில் "The Secretary, TNCWWB" என்ற பெயருக்கு வங்கி வரைவோலையாக எடுத்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப.த்துடன் இணைத்து பதிவு அஞ்சல் அல்லது விரைவு அஞ்சல் அல்லது நேரடியாக சமர்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பத்துடன் புகைப்படம் ஒட்டி, தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: செயலாளர், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம், 8, வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, நுங்கம்பாக்கம், சென்னை - 600 034
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.09.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...