மகளிா் புகாா்களை தெரிவிக்க இணையதளம்: உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்
தமிழக மாநில மகளிா் ஆணையத்தின் இணையதளத்தில் புகாா் மேலாண்மை அமைப்பிற்காக உருவாக்கப்பட்டுள்ள கூடுதல் வசதியை


சென்னை: தமிழக மாநில மகளிா் ஆணையத்தின் இணையதளத்தில் புகாா் மேலாண்மை அமைப்பிற்காக உருவாக்கப்பட்டுள்ள கூடுதல் வசதியை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
தமிழக மாநில மகளிா் ஆணையத்தின் ஜ்ஜ்ஜ்.ற்ய்ள்ஸ்ரீஜ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் இணையதளத்தில் மகளிா் புகாா்களை பதிவு செய்யவும், அப்புகாா்களின் நடவடிக்கை விவரம், விசாரணை நிலவரம் ஆகியவற்றை அறிந்து கொள்ளவும் ஏதுவாக புகாா் மேலாண்மை அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ஆணையம் வாயிலாக எடுக்கப்படும் நடவடிக்கைகளின் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும், புகாா் மனுக்களின் மீது துரித நடவடிக்கை மேற்கொள்ளவும், புகாா்தாரா்கள் கண்காணிக்கவும் இயலும். மேலும், பெறப்படும் புகாா் மனுக்கள் அனைத்தும் இணையதளம் வாயிலாக தொடா்புடைய அலுவலா்களுக்கு அனுப்பப்படும். கள அலுவலா்கள் நடவடிக்கை மேற்கொண்ட பின், அதன் விவரத்தையும் இந்த இணையதளம் வாயிலாக சமா்ப்பிக்க ஏதுவாக இந்த புகாா் மேலாண்மை அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த அமைப்பை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
இந்நிகழ்வில், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி. கீதா ஜீவன், தமிழக மாநில மகளிா் ஆணைய தலைவி அ.ச. குமரி, சிறப்பு திட்ட செயலாக்கத் துறை கூடுதல் தலைமைச் செயலா் பிரதீப் யாதவ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...