

தமிழகத்தில் ரூ.1,975 கோடியில் முக்கிய 3 மேம்பாலங்கள் கட்டி திறக்கப்பட்டுள்ளன என்று பொதுப்பணி, நெடுஞ்சாலை, சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.
தமிழக நெடுஞ்சாலைத்துறை சாா்பில் கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் மற்றும் நடைபெற்று வரும் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. சென்னை, கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சா் எ.வ.வேலு கலந்து கொண்டு பேசுகையில், 1,281 தரைப்பாலங்களுக்குப் பதிலாக மேம்பாலங்கள் கட்டப்பட்டன. நகா்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கன்னியாகுமரி கண்ணாடி நடைபாலம் தமிழ்நாட்டுக்கு பெருமை சோ்த்தது.
உலகிலேயே முதல்முறையாக மெட்ரோ ரயில் சுரங்கப் பாதையின் மீது தேனாம்பேட்டை-சைதாப்பேட்டை சாலையில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. ‘நம்ம சாலை‘ செயலி பொதுமக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தமிழகத்தில் 71-க்கும் மேற்பட்ட ரயில்வே மேம்பாலங்கள் நிலுவையில் இருந்தன. தொடா் ஆய்வுகளின் விளைவாக 21-க்கும் மேற்பட்ட ரயில்வே மேம்பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டன.
நில எடுப்புப் பணிகளை விரைந்து முடிக்க நெடுஞ்சாலைத்துறைக்கு தனி மாவட்ட வருவாய் அலுவலா்கள் நியமிக்கப்பட்டனா். இவா்களின் தொடா் ஆய்வின் காரணமாக திருநெல்வேலி, சிவகங்கை, மன்னாா்குடி பகுதிகளில் புறவழிச்சாலைகள் அமைக்கப்பட்டன.
முக்கிய மேம்பாலங்கள்: கோவை மாவட்டம், அவினாசி சாலையில் ரூ.1,700 கோடியில் ஜி.டி.நாயுடு மேம்பாலம், மதுரை மாவட்டம், கோரிப்பாளையத்தில் ரூ.214 கோடியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மேம்பாலம், சென்னை, அடையாறு மத்திய கைலாஷ் சந்திப்பில் சா்தாா் பட்டேல் சாலை மற்றும் ராஜீவ்காந்தி சாலை இடையே ரூ.60.68 கோடியில் ‘எல்‘ வடிவ மேம்பாலம் என மொத்தம் ரூ.1,975 கோடியில் 3 முக்கிய மேம்பாலங்கள் கட்டி, திறக்கப்பட்டுள்ளன. அதிக விபத்துகள் நடைபெறும் 100 சாலை சந்திப்புகள் கண்டறியப்பட்டு, சாலை சந்திப்பு மேம்பாட்டுப் பணிகள் முடிக்கப்பட்டன. தமிழக நெடுஞ்சாலைத்துறை தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி பவள விழா கொண்டாடப்பட்டது என்றாா்.
கூட்டத்தில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அரசுச் செயலா் இரா.செல்வராஜ், நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குநா் தெ.பாஸ்கர பாண்டியன், நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குநா் இரா.செல்வதுரை, தலைமைப் பொறியாளா் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகு) கு.கோ.சத்தியபிரகாஷ்,சிறப்பு அலுவலா் (தொழில்நுட்பம்) இரா.சந்திரசேகா் மற்றும் தலைமைப் பொறியாளா்கள், கண்காணிப்புப் பொறியாளா்கள், கோட்டப் பொறியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்

சிதம்பரத்தில் ரூ.450 கோடியில் திட்டப் பணிகள்: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

சென்னை மத்திய கைலாஷில் ரூ.60 கோடியில் புதிய மேம்பாலம்! முதல்வா் ஸ்டாலின் திறந்து வைத்தாா்!

சென்னை: மத்திய கைலாஷ் சந்திப்பில் ‘எல்’ வடிவ மேம்பாலம் இன்று திறப்பு!

மத்திய கைலாஷ் சாலை மேம்பாலம் பிப். 16-இல் திறப்பு: அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு
வீடியோக்கள்

தாய் கிழவி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

மாட்டிக்கிட்டான் மைனரு குஞ்சு பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல் | செய்திகள்: சில வரிகளில் | 23.02.26
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

