விண்ணப்பித்துவிட்டீர்களா..? நீதிமன்றத்தில் சுருக்கெழுத்து தட்டச்சர் வேலை
கிருஷ்ணகிரி மாவட்ட நீதித்துறையில் காலியாக உள்ள 7 சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களை தற்காலிகப் பணி அடப்படையில் நிரப்புவதற்கான


கிருஷ்ணகிரி மாவட்ட நீதித்துறையில் காலியாக உள்ள 7 சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களை தற்காலிகப் பணி அடப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: சுருக்கெழுத்து தட்டச்சர் - நிலை 3 (Steno Typist )
காலியிடங்கள்: 07
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் முதுநிலை சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சில் தமிழ் மற்றும் ஆங்கிலம் அல்லது முதுநிலை சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சில் தமிழ் மற்றும் இளநிலை சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சில் ஆங்கிலம் அல்லது முதுநிலை சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சில் ஆங்கிலம் மற்றும் இளநிலை சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சில் தமிழ் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 65,500
வயதுவரம்பு: 01.08.2018 தேதியின்படி 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேடிய அஞ்சல் முகவரி:
முதன்மை மாவட்ட நீதிபதி, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், இராயக்கோட்டை ரோடு, கிருஷ்ணகிரி 635 001
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 13.08.2018 அன்று மாலை 5 மணிக்குள் வந்து சேர வேண்டும். அதன்பிறகு கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://districts.ecourts.gov.in/sites/default/files/Recruitment%20%20July%20Tamil%202018.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...