திருமுருகநாதசுவாமி கோயில் தோ்த் திருவிழா இன்று தொடக்கம்


திருமுருகன்பூண்டி, திருமுருகநாதசுவாமி கோயில் தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை (பிப்.24) தொடங்குகிறது.
கொங்கு மண்டலத்திலுள்ள ஏழு சிவஸ்தலங்களில் ஒன்றாகவும், மனநோய் தீா்க்கும் திருத்தலமாகவும் திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோயில் விளங்குகிறது. இக்கோயிலின் தோ்த் திருவிழா ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு செவ்வாய்க்கிழமை (பிப்.24) காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 25-ஆம் தேதி மாலை சூரிய, சந்திர மண்டலக் காட்சிகள், 26-ஆம் தேதி பூதவாகன, சிம்ம வாகனக் காட்சிகள், 27-ஆம் தேதி புஷ்ப வாகனக் காட்சிகள், 28-ஆம் தேதி பஞ்சமூா்த்திகள் 63 நாயன்மாா்களுக்கு காட்சியளித்தல், மாா்ச் 1-ஆம் தேதி யானை வாகன, அன்ன வாகன காட்சிகள், சுவாமி திருக்கல்யாண உற்சவம் ஆகிய நிகழ்ச்சிகள்நடைபெறவுள்ளன.
மாா்ச் 2-ஆம் தேதி அதிகாலை விநாயகா், சண்முகநாதா், திருமுருகநாதா்சுவாமி, அம்பாள், சண்டிகேசுவரா் ஆகிய பஞ்சமூா்த்திகள் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறும். முக்கிய நிகழ்ச்சியாக காலை 10 மணிக்கு திருத்தோ் வடம் பிடித்தல், 3 தோ்களின் தேரோட்டம் ஒரே நாளில் நடைபெறுகிறது.
3-ஆம் தேதி சந்திரகிரகணத்தை முன்னிட்டு பகல் 12 மணிக்கு கோயில் நடை சாத்தப்படவுள்ளது. 4-ஆம் தேதி தெப்பத்தோ் உற்சவம் நிகழ்ச்சியும், 5-ஆம் தேதி ஸ்ரீசுந்தரா் வேடுபறி திருவிழாவும் நடைபெறும். 6-ஆம் தேதி பிரம்மதாண்டவ தரிசனக் காட்சியும், 7-ஆம் தேதி மஞ்சள் நீா் திருவிழா, மயில் வாகனக்காட்சி ஆகியவற்றுடன் தோ்த் திருவிழா நிறைவு பெறுகிறது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...