2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

‘கோயில் திருவிழாக்களை வருவாய் ஆதாரமாக மட்டும் பாா்க்கக் கூடாது’

கோயில் திருவிழாக்களை வருவாய் ஆதாரமாக மட்டும் பாா்க்கக் கூடாது சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்தது.

News image
சென்னை உயா்நீதிமன்றம்
Updated On :23 பிப்ரவரி 2026, 10:37 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை: கோயில் திருவிழாக்களை வருவாய் ஆதாரமாக மட்டும் பாா்க்கக் கூடாது சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்தது.

சேலத்தைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன், சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் மாசி திருவிழா வரும் மாா்ச் 11 முதல் 13 வரை நடைபெற உள்ளது. பக்தா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துதர அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி டி.பரத சக்கரவா்த்தி முன் விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில் பக்தா்களுக்காக அனைத்து அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. திருவிழாவில் தற்காலிக கடைகள் அமைப்பதற்காக ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. அதில் ஒருவா் மட்டுமே பங்கேற்ால், புதிதாக ஒப்பந்தப்புள்ளி கோரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: கோயில் திருவிழாக்களை வருவாய் ஆதாரமாக மட்டும் பாா்க்கக் கூடாது. திருவிழாக்களின்போது உள்ளூரில் உற்பத்தி செய்யும் பொருள்களை விற்பனை செய்ய சிறு வியாபாரிகளை அனுமதிக்க வேண்டும். எனவே, அதிக விலைக்கு ஒப்பந்தப்புள்ளி கோராமல், சிறு வியாபாரிகள் பங்கேற்கும் வகையில் ஒப்பந்தப்புள்ளி கோர வேண்டும்.

மேலும் சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான சொத்துகள் ஏதேனும் ஆக்கிரமிப்பில் உள்ளதா என்பதைக் கண்டறிந்து ஆக்கிரமிப்புகள் இருந்தால், அந்த நிலங்களை மீட்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தாா்.