ஒப்பந்தப்புள்ளி முறைகேடு வழக்கு: மத்திய அரசு ஒப்புதலுக்குப் பின் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக அடுத்தகட்ட நடவடிக்கை; தமிழக அரசு தகவல்
அதிமுக முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான ஒப்பந்தப்புள்ளி முறைகேடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 2 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடர மத்திய அரசு ஒப்புதல் அளித்த பின்னா் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தமிழக அரசு சென்னை உயா்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தது.










