வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

கனரா வங்கியில் மேலாளர் வேலை: 23க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

கனரா வங்கியின்கீழ் செயல்பட்டு வரும் "Canfin Homes Ltd" நிறுவனத்தில் காலியாக உள்ள 25 மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 10:03 am

ஆர். வெங்கடேசன்

கனரா வங்கியின்கீழ் செயல்பட்டு வரும் "Canfin Homes Ltd" நிறுவனத்தில் காலியாக உள்ள 25 மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து 23க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: மேலாளர் - 20

சம்பளம்: மாதம் ரூ.28,000 - 43,450

வயதுவரம்பு: 01.11.2017 தேதியின்படி 25 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: முதுநிலை மேலாளர் - 05

சம்பளம்: மாதம் ரூ.33,300 - 47,700

வயதுவரம்பு: 01.11.2017 தேதியின்படி 28 முதல் 35க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். எம்பிஏ, சிஏ, எல்எல்பி முடித்து 6 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள், பணி அனுபவம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை நெட் பேங்கிங் மூலமும் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.canfinhomes.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.11.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.canfinhomes.com என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.