மீன்வளப் பல்கலைக்கழகத்தில் வேலை: 30க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு
காஞ்சிபுரம் மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலை முட்டுக்காடில் செயல்பட்டு வரும் மீன்வளப் பல்கலைக்கழகத்தின் நீர்வாழ் உயிரிவளர்ப்பு தொழில்நுட்பம்,


காஞ்சிபுரம் மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலை முட்டுக்காடில் செயல்பட்டு வரும் மீன்வளப் பல்கலைக்கழகத்தின் நீர்வாழ் உயிரிவளர்ப்பு தொழில்நுட்பம், பயிற்சி மற்றும் தொழில் செய்முறை மைய இயக்குநரகத்தில் ஒப்பந்த அடிப்படையிலான தற்காலிக பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: மீன் உணவு ஆலை ஆப்பரேட்டர்
சம்பளம்: மாதம் ரூ.20,000
வயதுவரம்பு: 30.11.2017 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், உற்பத்தி, மெட்டீரியல் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி: மீன் உணவு ஆலை உதவியாளர்
சம்பளம்: மாதம் ரூ.12,000
தகுதி: 8-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ஓட்டுநர் உரிமம் மற்றும் எலக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பிங் வேலைகளில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
வயதுவரம்பு: 30.11.2017 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் தங்களைப் பற்றிய முழுமையான விவரங்கள் மற்றும் முக்கிய சான்றிதழ் நகல்களை நீர்வாழ் உயிரிவளர்ப்பு தொழில்நுட்பம், பயிற்சி மற்றும் தொழில் செய்முறை மைய இயக்குநரகம், கிழக்கு கடற்கரை சாலை முட்டுக்காடு, காஞ்சிபுரம் மாவட்டம் - 603 112 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய
http://tnfu.ac.in/app/webroot/img/documents/NADP-feed-Advt-Tamil.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...