நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

ஆசிரியர் தகுதி தேர்வுகள் மூலம் 1,111 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்: 10-ல் தகுதி பட்டியல்

ஏற்கனவே நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வுகள் மூலம் 1,111 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அதற்கான தேர்ச்சி

News image
Updated On :29 ஜனவரி 2024, 11:10 am

ஆர். வெங்கடேசன்

சென்னை: ஏற்கனவே நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வுகள் மூலம் 1,111 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அதற்கான தேர்ச்சி பெற்றவர்களின் தகுதி பட்டியல் 10-ஆம் தேதி வெளியிடப்படுகிறது.

இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் மூலம் பள்ளிக்கல்வித்துறையில் 286 பட்டதாரி ஆசிரியர்கள், பின்னடைவு பணியிடங்கள் 623, அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் 202 பணியிடங்கள் ஆகியவற்றுக்கு ஏற்கனவே, 2012, 2013, 2014-ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களை கொண்டு நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 1,111 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் தற்போது கூடுதலாக வேறு இளங்கலை பட்டம் பெற்றவர்கள், ஏற்கனவே தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்புக்கு வராதவர்கள், பி.எட். படித்த ஆண்டில் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின்போது பணித்தெரிவுக்கு உரிய தகுதி பெறாமல் தற்போது தகுதி பெற்றவர்கள் ஆகியோர் மீண்டும் வாய்ப்பு வழங்கவேண்டி விண்ணப்பித்துள்ளனர்.

எனவே, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் தகுதி பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in) 10-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. அந்த பட்டியல் 20-ஆம் தேதி வரை இருக்கும். இதனை சரிபார்த்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.