மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்புகட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகளுக்கான வினா-விடை - 20

பழந்தமிழகத்தின் வாணிகப் பொருள் பற்றிய குறிப்புகளைக் கூறும் இலக்கியங்கள்

News image
Updated On :29 ஜனவரி 2024, 6:28 pm

ஆர். வெங்கடேசன்


- கொற்கை முத்துக் குளியலைக் கூறும் இலக்கியங்கள் மதுரைக்காஞ்சி, சிறுபாணாற்றுப்படை

- விளைந்து முதிர்ந்த விழுமுத்து எனக் கூறும் இலக்கியம் - மதுரைக்காஞ்சி

- பழந்தமிழகத்தின் வாணிகப் பொருள் பற்றிய குறிப்புகளைக் கூறும் இலக்கியங்கள் பட்டிணப்பாலை, மதுரைக்காஞ்சி

- கடலைக் குறிக்கும் தமிழ்ச் சொற்கள் - ஆழி, ஆர்கலி, முந்நீர், வாரணம், பெளவம், பரவை, புணரி

- மரக்கலத்தைக் குறிக்கும் தமிழ்ச்சொற்கள் - கப்பல், கலம், கட்டுமரம், நாவாய், படகு, பரிசல், புணை, தோணி, தெப்பம், திமில், அம்பி, வங்கம், மிதவை, பஃறி, ஒடம்.

- கரிகாலனின் முன்னோர் காற்றின் போக்கு அறிந்து கலம் செலுத்தினர் எனக்கூறும் இலக்கியம் - புறநானூறு.

- பழந்தமிழர் கிரேக்கரையும், உரோமனியரையும் யவனர் என அழைத்தனர்.

- திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்றவர் - ஔவை

- யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்றவர் - கணியன் பூங்குன்றனார்.

- காலில் பிரிவு - தரைவழிப்பிரிவு.

- கலத்தில் பிரிவு - நீர்வழிப்பிரிவு.

- அதியமானின் முன்னோர் காலத்தில் சீனாவிலிருந்து கொண்டு வரப்பட்ட பயிர் - கரும்பு

- பழங்கால வரலாற்றை அறிய உதவும் காலக்கண்ணாடிகள் கல்வெட்டு, செப்பேடு, இலக்கியங்கள்

- ஆனந்தரங்கர் பிறந்த ஊர் - பெரம்பூர்

- ஆனந்தரங்கரின் தந்தை - திருவேங்கடம். 

- ஆனந்தரங்கர் தன் மூன்றாம் வயதில் தன் தாயை இழந்தார். 

- ஆனந்தரங்கரின் ஆசிரியர் பெயர் - எம்பார்.

- ஆனந்தரங்கர் நடத்தி வந்த தொழில் பாக்குக் கிடங்கு

- ஆனந்தரங்கர் தந்தை திருவேங்கடம், மைத்துனர் நைனியப்பரின் வேண்டுகோளுக்கு இணங்க புதுவையில் குடியேறினார். 

- அரசுப்பணியில் உதவியாளராகச் சேர்ந்து, நாளடைவில் திவானாகப் பதவி உயர்வு பெற்றார். 

- ஆனந்தரங்கர் துபாசி (மொழிபெயர்ப்பாளர்) ஆகப் பணியாற்றினார்.

- ஆனந்தரங்கர் துபாசியாக பணியாற்றிய ஆளுநர் - துய்ப்ளே

- “துய்ப்ளே” என்னும் ஆளுநரின் மொழிபெயர்ப்பாளர்(துபாசி) இறந்ததால், ஆனந்தரங்கர் அப்பணிக்கு அமர்த்தப்பட்டார்.

- ஆனந்தரங்கர் தம் நாட்குறிப்பிற்கு இட்ட பெயர்கள் - தினப்படி, செய்திக்குறிப்பு, சொஸ்த லிகிதம்.

- ஆனந்தரங்கர் துபாசியாகப் பணியாற்றிய காலத்தில், 1736ஆம் ஆண்டு முதல் 1761ஆம் ஆண்டு வரை ஏறத்தாழ 25 ஆண்டுகள் நாட்குறிப்பு எழுதியுள்ளார்.

- ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு வரலாற்றுக் கருவூலமாகத் திகழ்கிறது. 

- முசபர்சங் ஆனந்தரங்கருக்கு 1749-ஆண் ஆண்டில் 3 ஆயிரம் குதிரைகளை வழங்கி அவருக்கு மன்சுபேதார் என்னும் பட்டத்தையும் வழங்கினார்.

- செங்கற்பட்டுக் கோட்டைக்குத் தளபதியாகவும், பின்பு அம்மாவட்ட முழுமைக்கும் ஜாகிர்தாராகவும் நியமித்தார். 

- ஆளுநர் மாளிகைக்குள் பல்லக்கில் செல்லும் உரிமை அவருக்கு வழங்கப்பட்டது. 

- தங்கப் பிடி போட்ட கைத்தடி வைத்துக்கொள்ளவும் செருப்பணிந்து ஆளுநர் மாளிகைக்குள் செல்லவும் ஆனந்தரங்கர் உரிமை பெற்றிருந்தார்.

-   உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் முன்னோடி - பெப்பிசு

- இந்தியாவின் பெப்பிசு, நாட்குறிப்பு வேந்தர் எனப் போற்றப்பட்டவர் - ஆனந்தரங்கர்.

- பிரெஞ்சுப்படை காரைக்காலைப் பிடிக்கச் சென்று தோல்வியடைந்தது, தில்லியின் மீது பாரசீகப் படையெடுப்பு, குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கிய செய்திகள், இலபூர்தொனோ கப்பல் பிரெஞ்சு நாட்டில்லிருந்து சென்றது, வெளிநாட்டுப் பயணிகள் வந்து சென்ற நிகழ்வுகள் முதலிய முக்கிய வரலாற்றுச் செய்திகள் இடம் பெற்றுள்ளது. 

- துறைமுக நகரங்களில் உள்ள மக்களின் வருவாய்க்கு அடிப்படையாய் அமைவது அங்கு வரும் கப்பல்களின் போக்குவரத்தே ஆகும். 

- புதுச்சேரிக்கு கப்பல்கள் வந்த செய்தி கேட்டதும் மக்கள் மகிழ்தனர். 

- அது குறித்து, “நாட்பட்ட திரவியம் மீண்டும் கிடைத்தாற் போலவும், மரணமுற்ற உறவினர்கள் உயிர்பெற்று எழுந்து வந்தது போலவும், அவரவர் வளவிலே கலியாணம் நடப்பது போலவும், நீண்டநாள் தவங்கிடந்து புத்திர பாக்கியம் கிட்டினாற் ஒளவும், தேவாமிர்த்ததைச் சுவைத்துபோலவும் சந்தோஷித்தார்கள்; அதைக் காகிதத்தில் எழுத முடியாது” என்று குறிப்பிட்டுளார். 

- நீதி வழங்கல், தண்டனை அளித்தல் முதலிய செய்திகளும் நாட்குறிப்பில் இடம் பெற்றுள்ளன. 

- திருட்டு கும்பலின் தலைவனுக்கு கடைத் தெருவில் தூக்கில் இடப்பட்டது என்ற செய்தி குறிக்கப்படுள்ளது. 

- ஆனந்தரங்கர், தம் நாட்குறிப்பில் தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான உறவு, பெரியவர்களை மதிக்கும் பண்பு, பெரியவர்களுக்கு வணக்கம் செய்தல், கோவில் திருவிழாக்கள், பலகை வழக்கங்கள், சடங்குகள் போன்றவற்றை குறித்துள்ளார். 

- சொஸ்த = தெளிந்த அல்லது உரிமையுடைய 

- லிகிதம் = கடிதம் அல்லது ஆவணம் 

- வளவு = வீடு 

- துபாசி = இருமொழிப்புலமை உடையவர் (மொழிப்பெயர்ப்பாளர்) 

- டைஸ் என்னும் இலத்தின் சொல்லுக்கு நாள் என்பது பொருள். 

- டைரியம் என்னும் இலத்தின் சொல்லுக்கு நாட்குறிப்பு என்பது பொருள். இதிலிருந்து டைரி என்னும் ஆங்கிலச் சொல் உருவானது. 

- அருணாச்சலக் கவிராயர் தம் இராமநாடகத்தைத் திருவரங்கத்தில் அரங்கேற்றிய பின்னர், மீண்டும் ஒருமுறை ஆனந்தரங்கர் முன்னிலையில் அரங்கேற்றினார். 

- கே.கே.பிள்ளை- “ஆனந்தரங்கருடைய நாட்குறிப்புகள் அவரது காலத்தில் யாருமே புரிந்திராத அரியதொரு இலக்கியப் பணி” என்றார். 

- வ.வே.சு - “தான் நேரில் கண்டும் கேட்டும் அறிந்துள்ள செய்திகளைச் சித்திரகுப்தனைப் போல் ஒன்றுவிடாமல் குறித்து வைத்துள்ளார்” 

ஆனந்தரங்கர் குறித்து வெளிவந்த இலக்கியங்கள்: 
- ஆனந்தரங்கர் கோவை = தியாகராச தேசிகர் 

- கள்வன் நொண்டிச் சிந்து 

- ஆனந்தரங்கர் பிள்ளைத்தமிழ் = அறிமதி தென்னகன் 

- ஆனந்தரங்கர் விஜயசம்பு = சீனிவாசக்கவி(வடமொழி) 

- ஆனந்தரங்கர் ராட்சந்தமு = கச்தூரிரங்கக்கவி(தெலுங்கு)

தொடரும்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.