காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் வேலை: 6க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு

திரூப்பூரில் உள்ள "District Legal Services Authority"-இல் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும்

News image
Updated On :29 ஜனவரி 2024, 6:16 pm

ஆர். வெங்கடேசன்

திரூப்பூரில் உள்ள "District Legal Services Authority"-இல் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Junior Administrative Assistant 
காலியிடங்கள்: 04
தகுதி: 10, +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Junior Administrative Assistant (Computer Operator) 
காலியிடங்கள்: 01
தகுதி: 10, +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி துறையில் சான்றிதழ் பயிற்சி முடித்திருக்க வேண்டும் அல்லது கணினி அப்ளிகேசன் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000

பணி: Officer Assistant
காலியிடங்கள்: 01
சம்பளம்: ரூ.15,700 - 50,000
தகுதி: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 

வயதுவரம்பு: 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வின் போது தேவையான அனைத்து அசல் மற்றும் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.ecourts.gov.in/tn/tiruppur என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
Chairman/Principal District Judge, District Legal Services Authority, No.18 J.V. Complex, Lakshmi Nagar, P.N.Road, Tiruppur - 641 602

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 06.12.2017

மேலும் விவரங்கள் அறிய www.ecourts.gov.in/tn/tiruppur என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.