கேந்த்ரிய வித்யாலயா பள்ளியில் 6205 ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
கேந்திரிய வித்யாலயா சங்கதன் பள்ளியில் 6205 ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளிடப்பட்டுள்ளது.


கேந்திரிய வித்யாலயா சங்கதன் பள்ளியில் 6205 ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்திய அளவில் கேந்த்ரிய வித்யாலயா பள்ளியில் துவக்க நிலை ஆசிரியர்கள், பயற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் 6,205 காலிப் பணியிடங்கள் உள்ளன.
விண்ணப்ப கட்டணமாக முதல்வர் பணிக்கு ரூ.1,200, இதர பணிகளுக்கு ரூ.750 ஐ ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு நவம்பர், டிசம்பர் 2016-இல் நடைபெறும்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் மையங்கள்: சென்னை, பெங்களூரு. ஹைதராபாத். திருவனந்தபுரம்.
மேலும், இப்பணியிடங்கள் குறித்த வயது வரம்பு, கல்வி தகுதி உள்ளிட்ட விவரங்களை கேந்த்ரிய வித்யாலயத்தின் www.mecbsekvs.in www.kvsangathan.nic.in ஆகிய இணையதள முகவரிகளில் அறிந்து கொள்ளலாம். இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 17-ஆம் தேதி கடைசி நாளாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...