/

தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தில் கணக்கர், இளநிலை உதவியாளர் பணி

தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் சென்னை மற்றும் அதன் கிளைகளில் நிரப்பப்பட உள்ள கணக்கர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும்

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:28 am

ஆர். வெங்கடேசன்

தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் சென்னை மற்றும் அதன் கிளைகளில் நிரப்பப்பட உள்ள கணக்கர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும், அனுபவமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: கணக்கர்

காலியிடங்கள்: 05

தகுதி: வணிகவியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.08.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800 மற்றும் வழக்கமான படித்தொகைகள் வழங்கப்படும்.

பணி: இளநிலை உதவியாளர்

காலியிடங்கள்: 04

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சில் ஆங்கிலம் மற்றும் தமிழில் தட்டச்சில் உயர்நிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு தொழில்நுட்ப கல்வித்துறை மூலம் தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்பட்ட அலுவலக ஆட்டோமேஷன் கணினி கல்விக்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.08.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400 மற்றும் வழக்கமான படித்தொகைகள் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.poompuhar.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அணுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்,

தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம்,

759, அண்ணா சாலை, சென்னை 600002

விண்ணப்ப உறையின் மீது கணக்கர்/ இளநிலை உதவியாளர்" பதவிக்கான விண்ணப்பம் என்று எழுத வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.11.2015

மேலும் விவரங்கள் அறிய www.poompuhar.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.