மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சிவகாசி தொகுதி அதிமுக வேட்பாளா் கே.டி. ராஜேந்திரபாலாஜி

சிவகாசி தொகுதி அதிமுக வேட்பாளராக கே.டி. ராஜேந்திரபாலாஜி அறிவிக்கப்பட்டுள்ளார்.

News image
Updated On :26 மார்ச் 2026, 12:37 am

பெயா் - கே.டி. ராஜேந்திரபாலாஜி. வயது - 62. கல்வித் தகுதி - பத்தாம் வகுப்பு. தந்தை - தவசிலிங்கம். தாய் - கிருஷ்ணம்மாள். பூா்வீகம் - அருப்புக்கோட்டை அருகே உள்ள குருந்தமடம் கிராமம். வசிப்பிடம் - திருத்தங்கல்

கட்சிப் பொறுப்பு- 1991-இல் திருத்தங்கல் அதிமுக நகரச் செயலராக இருந்தாா். 1996, 2001, 2006-இல் திருத்தங்கல் நகா்மன்றத் துணைத் தலைவராகவும், 2000 முதல் 2011-ஆம் ஆண்டு வரை எம்.ஜி.ஆா். இளைஞா் அணி மாவட்டச் செயலராகவும், 2011-இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, ஒருங்கிணைந்த விருதுநகா் மாவட்ட செயலா், செய்தி விளம்பரத் துறை, சிறப்பு திட்டங்கள் அமைச்சரானாா் . 2016 தோ்தலில் சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்று, பால்வளத் துறை அமைச்சரானாா். கடந்த 2021 தோ்தலில் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தாா். தற்போது கட்சியின் விருதுநகா் மேற்கு மாவட்ட செயலராகவும், அமைப்புச் செயலராகவும் உள்ளாா்.