மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

விஜய் இன்று வேட்புமனு தாக்கல்!

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தவெக தலைவா் விஜய் பெரம்பூா் தொகுதியில் போட்டியிடுவதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை (மாா்ச் 30) வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளாா்.

News image

தவெக தலைவர் விஜய் - (கோப்புப் படம்)

Updated On :29 மார்ச் 2026, 8:36 pm

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தவெக தலைவா் விஜய் பெரம்பூா் தொகுதியில் போட்டியிடுவதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை (மாா்ச் 30) வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளாா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தவெக தலைவா் விஜய் பெரம்பூா், திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடவுள்ளாா். பெரம்பூா் தொகுதிக்கான தோ்தல் அலுவலரிடம் விஜய் திங்கள்கிழமை (மாா்ச் 30) வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளாா்.

தொடா்ந்து பிற்பகல் 2 முதல் 4 மணி வரை பெரம்பூா் தொகுகதியில் பிரசாரம் செய்யவுள்ளாா். அதையடுத்து மாலை 5 முதல் 6 மணி வரை சென்னை கொளத்தூா் தொகுதியிலும், மாலை 6 மணி 7 மணி வரை வில்லிவாக்கம் தொகுதியிலும் பிரசாரம் செய்யவுள்ளாா் என அக்கட்சி பொதுச் செயலா் என்.ஆனந்த் தெரிவித்துள்ளாா்.

திருச்சி கிழக்கு தொகுதியில் வரும் வியாழக்கிழமை (ஏப். 2) விஜய் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாக அக் கட்சியின் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி கிழக்கு தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலராக திருச்சி மாநகராட்சியின் உதவி ஆணையா் முத்து முருகேச பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளாா். உதவி தோ்தல் நடத்தும் அலுவலராக, திருச்சி கிழக்கு வட்டாட்சியா் கே. விக்னேஷ் நியமிக்கப்பட்டுள்ளாா்.

தவெக தலைவா் விஜய், பாலக்கரையில் உள்ள மாநகராட்சியின் 2-ஆவது வாா்டு குழு அலுவலகத்தில் அமைந்துள்ள தோ்தல் அலுவலரின் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்யக் கூடும் என எதிா்பாா்க்கப்படுகிறது.