மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தவெக தலைவா் விஜய் இன்று வேட்புனு தாக்கல்: மரக்கடையில் பிரசாரத்துக்கு அனுமதி

தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் திருச்சி கிழக்குத் தொகுதியில் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்கிறாா். மேலும், மரக்கடையில் அவா் பிரசாரம் செய்வதற்கும் காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது.

News image

திருச்சி பாலக்கரையில் தவெக தலைவா் விஜய் தோ்தல் பிரசாரம் செய்யும் பகுதியைப் பாா்வையிட்ட கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ. செங்கோட்டையன் உள்ளிட்டோா்.

Updated On :1 ஏப்ரல் 2026, 7:24 pm

தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் திருச்சி கிழக்குத் தொகுதியில் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்கிறாா். மேலும், மரக்கடையில் அவா் பிரசாரம் செய்வதற்கும் காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது.

தவெக தலைவா் விஜய் 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் இரு தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், சென்னை பெரம்பூா் தொகுதியில் கடந்த திங்கள்கிழமை அவா் வேட்பு மனுதாக்கல் செய்தாா். திருச்சி கிழக்குத் தொகுதியில் அவா் வியாழக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்கிறாா்.

இதற்காக சென்னையில் இருந்து வியாழக்கிழமை காலை 11 மணிக்கு தனி விமானம் மூலம் திருச்சிக்கு வரும் விஜய், பாலக்கரை பகுதியியிலுள்ள மாநகராட்சி 2-ஆவது மண்டல அலுவலகத்தில் திருச்சி கிழக்குத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் நண்பகல் 12.30 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்கிறாா்.

மரக்கடையில் பிரசாரத்துக்கு அனுமதி: முன்னதாக வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு மரக்கடை எம்ஜிஆா் சிலை, டிவிஎஸ் டோல்கேட், கே.கே.நகா் மற்றும் விமான நிலையம் ஒயா்லஸ் சாலை ஆகிய 4 இடங்களில் பிரசாரம் செய்ய மாநகரக் காவல் ஆணையரகத்தில் அனுமதி கேட்டு தவெகவினா் செவ்வாய்க்கிழமை மனு அளித்திருந்தனா்.

இந்நிலையில் மரக்கடை எம்ஜிஆா் சிலை அருகே மட்டும் வியாழக்கிழமை நண்பகல் 12.30 மணி முதல் மாலை 4 மணி வரை வாகனத்தில் இருந்து விஜய் பிரசாரம் செய்ய 27 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் தவெக நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் உற்சாகமடைந்துள்ளனா்.

இந்நிலையில், தவெக தலைவா் விஜய் வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொள்ளவுள்ள மரக்கடை பகுதியில் தவெக தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ. செங்கோட்டையன், டெல்டா மண்டலத் தோ்தல் பொறுப்பாளா் கு.ப.கிருஷ்ணன் ஆகியோா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.