மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திமுக கூட்டணியில் விசிக போட்டியிடும் தொகுதிகள்!

திமுக கூட்டணியில் விசிக போட்டியிடும் தொகுதிகளின் விவரம்...

News image

முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுக - விசிக தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையொப்பம். - (கோப்புப் படம்)

Updated On :28 மார்ச் 2026, 9:55 am

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் தொகுதிகளின் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 23 அன்று நடைபெறுகிறது. திமுக, அதிமுக, நாதக மற்றும் தவெக ஆகிய கட்சிகளின் தலைமையில் நான்கு முனைப் போட்டிகள் நடைபெறுகின்றன.

இதில், திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தேமுதிக, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை திமுக பொருளாளர் டி.ஆர். பாலு சனிக்கிழமை (மார்ச் 28) அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தொல். திருமாவளவன் தலைமையிலான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரும் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுவதற்கு 6 தனித் தொகுதிகள் மற்றும் 2 பொதுத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து, வரும் தேர்தலில் காட்டுமன்னார்கோவில் (தனி), செய்யூர் (தனி), திருப்போரூர், அரக்கோணம் (தனி), திண்டிவனம் (தனி), பெரியகுளம் (தனி), கள்ளக்குறிச்சி (தனி) மற்றும் பண்ரூட்டி ஆகிய தொகுதிகளில் விசிக போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Summary

The details of the constituencies where the vck will contest have been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.