தமிழகத்தில் ஆளும் திமுக கட்சியின் தலைமையில் அமைந்துள்ள கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை டி.ஆர். பாலு அறிவித்துள்ளார்.
அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கான தொகுதிகள் அறிவிக்கப்பட்டு வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்ட நிலையில், திமுக இன்றுதான் கூட்டணிக் கட்சிக்கான தொகுதிகளை அறிவித்துள்ளது.
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில்,
பொன்னேரி (தனி), ஸ்ரீபெரும்புதூர் (தனி), சோளிங்கர், உதகமண்டலம், ஈரோடு கிழக்கு, அறந்தாங்கி, கடலூர், மயிலாடுதுறை, காரைக்குடி, சிவகாசி, திருவாடனை, திருவைகுண்டம், நான்குநேரி, குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர், வேளச்சேரி, ஊத்தங்கரை (தனி), துறையூர், கவுண்டம்பாளையம், ஆத்தூர் (தனி), பென்னாகரம், சிங்காநல்லூர், அம்பாசமுத்திரம், கிருஷ்ணகிரி, உசிலம்பட்டி, சங்கரன்கோவில், மேலூர் உள்ளிட்ட 28 தொகுதிகளும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
மொத்தமுள்ள 234 தொகுதிகளில், திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகளும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், மதிமுகவுக்கு 4 தொகுதிகளும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு இரண்டு தெகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இது தவிர்த்து, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி இரண்டு தொகுதிகளிலும், மனித நேய மக்கள் கட்சி இரண்டு தொகுதிகளிலும், முக்குலத்தோர் புலிப்படை, மனித நேய ஜனநாயக கட்சி, எஸ்டிபிஐ கட்சி, தமிழர் தேசம் கட்சி ஆகியவை உதய சூரியன் சின்னத்தில் தலா ஒரு தொகுதியில் போட்டியிடுகின்றன.
அனைத்துக் கட்சிகளும் போட்டியிடும் தொகுதிகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் போட்டியிடும் தொகுதிகள்!
தியாகியாகவே இருப்பாரா திருமாவளவன்?

திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


