திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் 11 தொகுதிகளின் விவரங்கள் வெளியாகியுள்ளன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 23 அன்று நடைபெறுகிறது. ஆளுங்கட்சியான திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் போட்டியிடும் சட்டப்பேரவைத் தொகுதிகளின் விவரங்கள் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, திமுக கூட்டணியின் தேமுதிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விசிக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தலில், மதிமுக 3 தொகுதிகளிலும், கொங்கு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை தலா 2 தொகுதிகளிலும் மற்றும் முக்குலத்தோர் புலிப்படை, மனிதநேய ஜனநாயக கட்சி, எஸ்டிபிஐ, தமிழர் தேசம் கட்சி ஆகியவை தலா 1 தொகுதியிலும் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றன.
இந்த நிலையில், மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட 4 தொகுதிகளில் மொடக்குறிச்சி, மதுரை தெற்கு, கடையநல்லூர் ஆகிய 3 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் அக்கட்சியின் வேட்பாரளர்கள் போட்டியிடுகின்றனர்.
இத்துடன், கொமதேக - திருச்சங்கோடு மற்றும் பொள்ளாச்சி; மமக - நாகப்பட்டினம் மற்றும் மணப்பாறை; முக்குலத்தோர் புலிப்படை - சிவகங்கை; மஜக - சிதம்பரம்; எஸ்டிபிஐ - நன்னிலம் மற்றும் தமிழர் தேசம் கட்சி - நத்தம் ஆகிய தொகுதிகளில் அக்கட்சியினர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவுள்ளனர்.
Summary
11 constituencies where the alliance parties in will contest under the Udayasuriyan symbol.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

176 இடங்களில் போட்டியிடும் உதயசூரியன்!

திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போட்டியிடும் தொகுதிகள்!

திமுக கூட்டணியில் விசிக போட்டியிடும் தொகுதிகள்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



