திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக மதிமுக அறிவிக்கப்பட்டுள்ளதால், உதயசூரியன் சின்னம் 176 இடங்களில் போட்டியிடுகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ், தேமுதிக, விசிக, இடதுசாரிகள், மதிமுக, ஐயூஎம்எல், மக்கள் நீதி மய்யம் (மநீம) உள்பட 20-க்கும் மேற்ப்பட்ட கட்சிகள் இணைந்துள்ளன.
தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இறுதிசெய்யப்பட்டது.
ஏற்கெனவே, திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த முறையைவிட காங்கிரஸுக்கு 3 தொகுதிகள் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
ஐயூஎம்எல், மனிதநேய மக்கள் கட்சி (மமக) ஆகியவற்றுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் ஐயூஎம்எல் ஏணி சின்னத்திலும், மமக உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட முடிவு செய்துள்ளன.
மேலும், கடந்த முறை உதயசூரியன் சின்னத்தில் 6 தொகுதிகளில் போட்டியிட்ட மதிமுக, 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 3 தொகுதிகளில் 3 உதயசூரியன் சின்னத்திலும், ஒரு தொகுதியில் தனிச் சின்னத்தில் போட்டியிடும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மதுரை தெற்கு, மொடக்குறிச்சி, கடையநல்லூர், சீர்காழி ஆகிய தொகுதிகள் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், சீர்காழியில் மட்டும் தனிச் சின்னத்தில் போட்டியிடுவோம் என வைகோ தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், மதிமுக வேட்பாளர்கள் 4 பேரும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக வைகோ இன்று அறிவித்தார்.
இதன்மூலம், திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை 176 ஆக அதிகரித்துள்ளது.
Summary
Since it has been announced that the MDMK will contest under the 'Rising Sun' symbol in all four constituencies allotted to it within the DMK alliance, the 'Rising Sun' symbol is contesting in 176 seats.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி!

உதயசூரியனில் போட்டியிடும் கூட்டணிக் கட்சிகள்! 11 தொகுதிகள் எவை?

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மநீமவுக்கு நிபந்தனை

172 தொகுதிகளில் களம் இறங்குகிறது ‘உதயசூரியன்’
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



