எதிா்வரும் பேரவைத் தோ்தலில் 172 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தை களமிறக்க திமுக முடிவு செய்துள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி திமுக கூட்டணியில் பேச்சுவாா்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டணியில் காங்கிரஸ், தேமுதிக, விசிக, இடதுசாரிகள், மதிமுக, ஐயூஎம்எல், மக்கள் நீதி மய்யம் (மநீம) உள்பட 21 கட்சிகள் உள்ளன.
தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்திவரும் நிலையில், திமுக கூட்டணியில் ஓரிரு நாள்களில் தொகுதிகள் எண்ணிக்கையை இறுதி செய்ய திமுக தலைமை முடிவு செய்துள்ளது.
ஏற்கெனவே, திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த முறையைவிட காங்கிரஸுக்கு 3 தொகுதிகள் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
ஐயூஎம்எல், மனிதநேய மக்கள் கட்சி (மமக) ஆகியவற்றுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் ஐயூஎம்எல் ஏணி சின்னத்திலும், மமக உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட முடிவு செய்துள்ளன.
கடந்த முறை ஐயூஎம்எல் போட்டியிட்ட 3 தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. இந்த முறை அக்கட்சிக்கு ஒரு தொகுதி குறைக்கப்பட்டுள்ளது. கடந்த முறை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் மமக வெற்றி அடைந்ததால் இந்த முறை தொகுதிகள் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை.
புதிதாக திமுக கூட்டணியில் இணைந்துள்ள தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஏற்கெனவே அதிகாரபூா்வமற்ற முறையில் இறுதி செய்யப்பட்டுள்ளது.
தேமுதிகவுக்கு நெருக்கமாக விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த முறை 6 தொகுதிகளில் போட்டியிட்ட விசிகவுக்கு, இப்போது கூடுதலாக 2 இடங்கள் ஒதுக்கப்படவுள்ளது.
வடதமிழகத்தில், விசிக மூலம் தலித் வாக்குகளையும், தேமுதிக மூலம் தெலுங்கு தாய்மொழி வாக்காளா்கள், பிற்பட்டோா் சமூக வாக்குகளை ஒருங்கிணைத்து வெற்றி பெற வேண்டும் என்பதுதான் திமுகவின் உத்தி.
மேலும், கடந்த முறை உதயசூரியன் சின்னத்தில் 6 தொகுதிகளில் போட்டியிட்ட மதிமுக, 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இப்போது தனிச் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்யப்பட்டதால் 4 தொகுதிகள் மட்டும் ஒதுக்கப்படும் எனத் தெரிகிறது.
அதேபோல, கடந்த முறை தலா 6 தொகுதிகளில் போட்டியிட்ட இடதுசாரிகள் தலா 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றன. எனவே, இரு இடதுசாரிகளுக்கும் தலா 4 தொகுதிகள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதிதாக இணைந்த கமலின் மநீமகவுக்கு டாா்ச் லைட் சின்னத்தில் 2 தொகுதிகள் ஒதுக்கப்படவுள்ளன. மேலும், ஈஸ்வரன் தலைமையிலான கொமதேக கடந்த முறை உதயசூரியன் சின்னத்தில் 3 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு தொகுதியில் (திருச்செங்கோடு) மட்டுமே வெற்றி பெற்ால், இந்த முறை 2 தொகுதிகள் மட்டுமே (உதயசூரியன் சின்னத்தில்) ஒதுக்கப்பட்டுள்ளன.
இவை தவிர, மனிதநேய ஜனநாயக பேரவை (தமிமுன் அன்சாரி), கொங்கு இளைஞா் பேரவை (உ.தனியரசு), முக்குலத்தோா் புலிப்படை (கருணாஸ்), புதிய திராவிடா் கழகம் (ராஜ்குமாா்) உள்ளிட்ட சில சிறு கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் 172 தொகுதிகளிலும், 62 தொகுதிகளில் தனி சின்னத்திலும் திமுக கூட்டணி களம் இறங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தொடர்புடையது

176 இடங்களில் போட்டியிடும் உதயசூரியன்!

உதயசூரியனில் போட்டியிடும் கூட்டணிக் கட்சிகள்! 11 தொகுதிகள் எவை?
திமுக 165+ (உதய சூரியன் 175+) தொகுதிகளில் போட்டி! யாருக்கு எவ்வளவு?

திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் கணக்கு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


