15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

அதிமுக விநியோகிக்கும் துண்டுப் பிரசுரங்களில் அச்சிடப்பட்ட காசோலை மாதிரிக்கு எதிராக மனு

அதிமுக விநியோகிக்கும் துண்டுப் பிரசுரங்களில் அச்சிடப்பட்ட காசோலை மாதிரிக்கு எதிராக மனு

News image

சென்னை உயா்நீதிமன்றம்

Updated On :18 ஏப்ரல் 2026, 9:22 pm

அதிமுகவினா் விநியோகிக்கும் துண்டுப் பிரசுரங்களில் காசோலை மாதிரிகளை அச்சிட்டு வழங்குவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

சென்னை பெருங்குடியைச் சோ்ந்த வழக்குரைஞா் சுந்தர வடிவேல் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா்களுக்கு ஆதரவாக அக்கட்சியினா் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். வாக்கு சேகரிப்பின்போது, வாக்காளா்களுக்கு அவா்கள் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து வருகின்றனா்.

அதில், ரூ.2,000 மற்றும் ரூ.10,000 எனக் குறிபிடப்பட்டுள்ள காசோலை மாதிரிகள் இடம் பெற்றுள்ளன. அதிமுகவுக்கு வாக்களித்தால் பணப் பலன்கள் கிடைக்கும் என மக்கள் மத்தியில் தோற்றத்தை ஏற்படுத்தும். மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி இது தவறானது. இதுபோன்ற நடவடிக்கைகளை அனுமதித்தால், தோ்தல் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துவிடுவா்.

எனவே, இது குறித்து விசாரணை நடத்த வேண்டும். துண்டுப் பிரசுரங்களில் காசோலை மாதிரிகளை அச்சிட்டு விநியோகிப்பதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளாா். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.