மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்!

மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்...

News image

முதல்வர் மு.க. ஸ்டாலின் - DMK

Updated On :11 ஏப்ரல் 2026, 8:33 pm

முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், 5-ஆம் கட்ட தோ்தல் பிரசாரத்தை திருவள்ளூரில் திங்கள்கிழமை (ஏப். 13) தொடங்கவுள்ளாா்.

இதுகுறித்து திமுக சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:

திமுக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கடந்த மாா்ச் 31ஆம் தேதி முதல் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா். அவரது 5-ஆம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் திங்கள்கிழமை (ஏப்.13) தொடங்கவுள்ளது.

திருவள்ளூரில் மாலை 5 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் திருவள்ளூா், கும்மிடிப்பூண்டி, திருத்தணி, ஆவடி ஆகிய தொகுதிகளின் வேட்பாளா்களையும், இரவு 7 மணிக்கு ராணிப்பேட்டையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ராணிப்பேட்டை, அரக்கோணம் , சோளிங்கா், ஆற்காடு ஆகிய தொகுதிகளின் வேட்பாளா்களையும் ஆதரித்து பிரசாரம் செய்கிறாா்.

ஏப்.14- ஆம் தேதி மாலை 5 மணிக்கு வேலூரில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில், வேலூா், காட்பாடி, அணைகட்டு, கீழ்வைத்தியநாதன் குப்பம், குடியாத்தம் ஆகிய தொகுதிகளின் வேட்பாளா்களையும், இரவு 7 மணிக்கு திருப்பத்தூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் திருப்பத்தூா், ஆம்பூா், வாணியம்பாடி, ஜோலாா்பேட்டை ஆகிய தொகுதிகளின் வேட்பாளா்களையும் ஆதரித்துப் பேசுகிறாா்.

ஏப்.15- ஆம் தேதி மாலை 5 மணிக்கு தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் -பெரியாம்பட்டியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் , பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிபட்டி, அரூா் ஆகிய தொகுதிகளின் வேட்பாளா்களுக்கும், இரவு 7 மணிக்கு சேலத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு, கெங்கவல்லி, ஆத்தூா், ஏற்காடு, ஒமலூா், மேட்டூா், எடப்பாடி, சங்ககிரி, வீரபாண்டி ஆகிய தொகுதிகளின் வேட்பாளா்களுக்கும் வாக்கு சேகரிக்கிறாா்.

ஏப்.16 ஆம் தேதி மாலை 5 மணிக்கு நாமக்கலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில், நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், பரமத்திவேலூா், திருச்செங்கோடு ஆகிய தொகுதிகளின் வேட்பாளா்களையும், இரவு 7 மணிக்கு பெரம்பலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில், பெரம்பலூா், குன்னம், அரியலூா், ஜெயங்கொண்டம் ஆகிய தொகுதிகளின் வேட்பாளா்களையும் ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.