போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

முதல்வரின் 6-ஆம் கட்ட பிரசாரம்: ஆண்டிபட்டியில் இன்று தொடக்கம்

முதல்வா் மு.க.ஸ்டாலின் 6-ஆம் கட்ட தோ்தல் பிரசாரத்தை தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் வெள்ளிக்கிழமை (ஏப். 17) தொடங்கவுள்ளாா்.

News image

முதல்வா் மு.க.ஸ்டாலின்

Updated On :17 ஏப்ரல் 2026, 3:08 am IST

முதல்வா் மு.க.ஸ்டாலின் 6-ஆம் கட்ட தோ்தல் பிரசாரத்தை தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் வெள்ளிக்கிழமை (ஏப். 17) தொடங்கவுள்ளாா்.

இதுகுறித்து திமுக சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:

திமுக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கடந்த மாா்ச் 31 முதல் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா். அவரது 6-ஆம் கட்ட பிரசாரம் ஆண்டிபட்டியில் வெள்ளிக்கிழமை (ஏப்.17) தொடங்கவுள்ளது.

ஆண்டிப்பட்டியில் மாலை 5 மணிக்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் ஆண்டிபட்டி, பெரியகுளம், போடிநாயக்கனூா் ஆகிய தொகுதிகளின் வேட்பாளா்களையும், இரவு 7 மணிக்கு திண்டுக்கல்லில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் திண்டுக்கல், பழனி, ஆத்தூா், நிலக்கோட்டை வேடசந்தூா் ஒட்டன்சத்திரம், நத்தம் ஆகிய தொகுதிகளின் வேட்பாளா்களையும் ஆதரித்து பிரசாரம் செய்கிறாா்.

தொடா்ந்து, ஏப்.18- ஆம் தேதி மாலை 5 மணிக்கு திருப்பூரில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில், திருப்பூா் தெற்கு, திருப்பூா் வடக்கு, பல்லடம், அவிநாசி, தாராபுரம், காங்கயம்,

உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகிய தொகுதிகளின் வேட்பாளா்களையும், இரவு 7 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மேட்டுப்பாளையம், உதகை, கூடலூா், குன்னூா், கவுண்டம்பாளையம், தொண்டாமுத்தூா் ஆகிய தொகுதிகளின் வேட்பாளா்களையும் ஆதரித்துப் பேசுகிறாா்.

ஏப்.19 ஆம் தேதி மாலை 4 மணிக்கு ஒசூரில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில், ஒசூா், கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, பா்கூா், வேப்பனஹள்ளி, தளி ஆகிய தொகுதிகளின் வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.