சென்னை: சென்னை கணிதவியல் கல்வி மையத்தில், வரும் 2026 - 27ஆம் கல்வியாண்டு முதல் தொடங்கவிருக்கும் பிஎஸ் (ஹானர்ஸ்) நான்கு ஆண்டுகள் கணிதப் பட்டப்படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சென்னை கணிதவியல் கல்வி மையத்தில் பயிற்றுவிக்கப்பட்டு வரும் பிஎஸ்சி கணிதவியல் மூன்றாண்டு பட்டப்படிப்பை முடிக்கும் பட்டதாரி இளைஞர்கள் உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்களில் நல்ல வேலை வாய்ப்புகளை பெற்று வருகிறார்கள்.
ஆனால், கல்வி நிறுவனங்களில் நடைபெறும் வளாகத் தேர்வுகளின்போது, பங்கேற்கும் பெரிய நிறுவனங்கள் நான்கு ஆண்டு பட்டப்படிப்பையே கட்கிறார்கள். எனவே, வரும் கல்வியாண்டிலிருந்து பிஎஸ்சி படிப்பை 4 ஆண்டுகள் வழங்கும் பிஎஸ் படிப்பாக தரம் உயர்த்தியிருக்கிறோம்.
நான்காம் ஆண்டில், இணைப்புப் படிப்பாக மாணவர்கள் டேட்டா சயின்ஸ் பாடத்திலும் பட்டம் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் இப்படிப்பில் 50 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். மே 2ஆம் தேதி நடக்கும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் சேர்க்கை கிடைக்கும். இங்கு பிஎஸ் முடித்தவர்கள் ஓராண்டில் முதுகலைப் பட்டமும் இங்கு படிக்கலாம்.
cmi.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி ஏப்ரல் 4. சென்னை, மதுரை உள்பட 30 மையங்களில் தேர்வு நடைபெறும். இந்த தேர்வுக்கு 4000 பேர் விண்ணப்பிப்பார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் பணியாற்றும் அரசு ஊழியா்களை இடமாற்றக் கோரிய மனு முடித்துவைப்பு
பேராவூரணி சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளா்!

ஓராண்டு பி.எட். படிப்பை மீண்டும் கொண்டுவரும் திட்டமில்லை: மத்திய கல்வி அமைச்சகம்

ஐஐஎஸ்இஆா் நிறுவன இளநிலைப் படிப்பு நுழைவு சோ்க்கைக்கு திறனறித் தோ்வு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


