15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

ஊக்குவித்தல்... வழிகாட்டுதல்... உதவிகள்!

தனியார் தொழில் துறையில் ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) ஆகியவை சார்பாக

News image
Updated On :25 ஜனவரி 2017, 4:42 am

தனியார் தொழில் துறையில் ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) ஆகியவை சார்பாக துவக்கப்பட்ட குளோபல் இன்னோவேஷன் அன்ட் டெக்னாலஜி அலையன்ஸ் Global Innovation & Technolgy Alliance (GITA)ன அமைப்பு தனியார் தொழிற்துறையை ஊக்குவித்தும், அதற்கான உதவிகளையும் செய்து வருகிறது.

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் கீழ் இயங்கும் தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு (Confederation of Indian Industry  (CII) இணைந்து குளோபல் இன்னோவேஷன் அன்ட் டெக்னாலஜி அலையன்ஸ் Global Innovation & Technolgy Alliance (GITA) என்ற  அமைப்பை உருவாக்கி அதன் மூலம் தனியார் துறையில் ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கவும், புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கவும், தொழில்நுட்பங்களை மேம்படுத்தவும், புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டறியவும் உதவிகளைச் செய்து வருகின்றது.

இந்த அமைப்பு பல்வேறு நாடுகளுடன் இணைந்து மானிய உதவிகளையும் வழங்குகிறது. கனடா, இங்கிலாந்து, தைவான், ஸ்பெயின், கொரியா, பின்லாந்து, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து பல்வேறு மானிய உதவிகள் வழங்கப்படுகின்றன.  மேலும் பல்வேறு விழிப்புணர்வுக் கருத்தரங்குகள், பயிற்சி முகாம்களையும் நடத்துகின்றது.  

உதவிகளையும், வழிகாட்டுதல்களையும் பெற, இதுகுறித்த மேலும் தகவல்களுக்கு: http:gita.org.in, http:tdb.gov.ingita இணைய தளங்களைப் பாருங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.