கோடை விடுமுறைக் காலத்தில் புதுமை படைப்பாற்றலில் மாணவர்கள் ஆர்வம் இல்லாது இருக்கின்றனர். மினி ஹெலிகாப்டர், சோலார் குக்கர் போன்ற வித்தியாசமான படைப்புகளை உருவாக்கும் பயிற்சிகளுக்கு போதிய அளவு மாணவர்கள் வராதது, தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தினரை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.
சென்னையில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களின் அறிவியல் கற்றல் திறன் வளர்ச்சிக்கும் அவர்களை இளம் விஞ்ஞானிகளாக தரம் உயர்த்தவும் அடையாறு காந்தி மண்டபம் சாலையில் உள்ள தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தில் மாணவர்களுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்புகள் அவ்வப்போது நடத்தப்படுகின்றன.
இதில் இயற்பியல், வேதியியல், பொறியியல் உள்ளிட்ட அறிவியல் கூறுகளில் உள்ள முக்கிய சாதனங்கள், கண்டுபிடிப்புகள் குறித்து பொறியியல் வல்லுநர்கள், பேராசிரியர்கள் மற்றும் சிறப்பு பயிற்றுவிப்பாளர்கள் பங்கேற்று மாணவர்களுக்கு பயிற்சி வழங்குகின்றனர். சலுகை கட்டணத்தில் நடத்தப்படும் இந்தப் பயிற்சி முகாம்களில் பங்கேற்கும் மாணவர்களுக்கு அறிவியல் மாதிரி பொருள்களை வடிவமைக்கும் கையேடு, பொருள்களின் வடிவமைப்பு குறித்த வரைபடங்கள், பங்கேற்பு சான்றிதழ், மதிய உணவு உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
இதன் மூலம் மாணவர்கள் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் குறித்த விழிப்புணர்வை பெறுவதுடன், மாவட்ட மற்றும் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சிகளில் சிறந்த படைப்புகளை தயார் செய்து பரிசுகள் பெற முடியும் என்கின்றனர் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தைச் சேர்ந்தவர்கள்.
ஆர்வம் காட்டாத மாணவர்கள்: இந்நிலையில் 8லிஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படிக்கும் மாணவர்களுக்கு சோலார் குக்கர், ஹெலிகாப்டர், வீடு, தொழிற்சாலைகள்
உள்ளிட்டவற்றின் மாதிரிகள் தயாரிக்கும் கோடைகால சிறப்பு பயிற்சி முகாமுக்கு தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் (பிர்லா கோளரங்கம்) சனிக்கிழமை ஏற்பாடு செய்திருந்தது. ஆனால், இதற்கு இரண்டு மாணவர்கள் மட்டுமே வந்திருந்தனர். கட்டணம் ரூ.300 ஆகும்.
மாணவர்கள் போதிய அளவு வராத காரணத்தால் இந்த பயிற்சி முகாம் மே 10லிஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இது போன்ற பயிற்சிகளை கற்றுத்தர சென்னையில் உள்ள தனியார் பயிற்சி மையங்களில் ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. மாணவர்கள் போதிய அளவு வராமல் போனதற்கான காரணம் குறித்து, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குநர் பி.அய்யம்பெருமாளிடம் கேட்டபோது அவர் கூறியது:
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் சார்பில் நடத்தப்படும் பயிற்சி வகுப்புகளில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் சம அளவில் கலந்து கொள்கின்றனர்.
இதற்கு முன்பு நடத்தப்பட்ட பயிற்சி வகுப்புகளுக்கு அதிகமானோர் விண்ணப்பித்தனர். அதில் முதலில் விண்ணப்பித்தவர்களுக்கு பயிற்சியில் கலந்துகொள்ள முன்னுரிமை அளித்தோம்.
அரசு பள்ளியைச் சேர்ந்த மாணவர்களில் சிலருக்கு ஆர்வம் மற்றும் திறமை இருந்தும் பயிற்சிக் கட்டணத்தை செலுத்த இயலாத நிலை உள்ளது. அவர்களுக்கு இலவசமாக
பயிற்சி அளித்துள்ளோம். பள்ளி விடுமுறை காரணமாகவே பயிற்சியில் கலந்துகொள்ள மிகக் குறைந்த அளவுக்கு மாணவர்கள் முன்பதிவு செய்திருந்தனர் என்றார் அய்யம்பெருமாள்.
பயிற்சி குறித்த விழிப்புணர்வு மாணவர்களிடம் இருக்கிறதா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. அது குறித்து சென்னை மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியது:
அறிவியல் பயிற்சி குறித்து தமிழ்நாடு அறிவியல் மையத்தில் இருந்து தவறாமல் சுற்றறிக்கைகளை அனுப்புகிறார்கள். இதுவரை எங்கள் பள்ளியில் இருந்தே பல மாணவர்கள் அதில் கலந்துகொண்டு பயிற்சி பெற்றுள்ளனர். அதன் மூலம் பல அறிவியல் கண்காட்சிகளிலும் பரிசுகள் பெற்றனர். தற்போது கோடை விடுமுறை என்பதால் பொழுதுபோக்கு அம்சங்களில் மாணவர்களின் கவனம் திசை திரும்பியிருக்கலாம். அதனால் பயிற்சியில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு சற்று குறைந்திருக்கும் என்றார்.
அடையாள அட்டை போதும்: கோடை காலத்தில் இது போன்ற பயிற்சிகள் மாணவர்களின் அறிவியல் திறனை மேம்படுத்தும் என்கிறார்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தைச் சேர்ந்தவர்கள்.
பள்ளி விடுமுறை என்ற போதிலும், ஆர்வம் உள்ள மாணவர்கள் இந்தப் பயிற்சியில் சேருவதற்கு தங்களின் பள்ளி அடையாள அட்டைகளைக் காண்பித்தாலே போதுமானது. எனவே, அடுத்த வாரம் நடைபெறும் பயிற்சியில் அதிக மாணவர்கள் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் தொழில்நுட்ப மையத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரிஷப ராசிக்கு மகிழ்ச்சி: தினப்பலன்கள்!
எடப்பாடி பழனிசாமி பிரசாரத்துக்கு தடை கோரிய வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைப்பு!

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை விரும்பும் மக்கள்: சந்திரபாபு நாயுடு

‘எக்ஸ்’ தளத்தில் ஆபாச உள்ளடக்கம்: எலான் மஸ்குக்கு பிரான்ஸ் அழைப்பாணை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

