

முன்னெப்போதும் இல்லாத அளவு எதிர்பார்ப்பு இந்த நிதியாண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கை மீது இருந்தது. அதற்குப் பல காரணங்கள். முதலில், வழக்கமான பிப்ரவரி கடைசி நாளி
லிருந்து பிப்ரவரி முதல் தேதிக்கு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் தேதி மாற்றப்பட்டிருப்பது. இரண்டாவதாக, நரேந்திர மோடி அரசின் பதவிக் காலம் பாதி அளவு கடந்துவிட்ட நிலையில் தாக்கல் செய்யப்படுகிறது என்பதால் ஏற்படும் எதிர்பார்ப்பு. எல்லாவற்றிற்கும் மேலாக, ரூ.500, ரூ.1000 செலாவணிகள் செல்லாததாக்கப்பட்டதைத் தொடர்ந்து தாக்கல் செய்யப்படும் நிதிநிலை அறிக்கை என்பதால், அந்த முடிவின் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை வெளிப்படுத்துவதாக இந்த அறிக்கை அமையும் என்பதால் ஏற்பட்ட எதிர்பார்ப்பு.
7 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்ட பொருளாதார வளர்ச்சி 0.5 சதவீதம் குறைவாக 6.5 சதவீதமாகத்தான் இருக்கும் என்கிறது பொருளாதார ஆய்வறிக்கை. அதை நிதியமைச்சர் அருண் ஜேட்லியும் தனது உரையில் ஏற்றுக் கொள்கிறார். செலாவணியைச் செல்லாததாக்கிய முடிவால், உற்பத்தி முடக்கமும், பொருளாதாரத் தேக்கமும் ஏற்பட்டது என்னவோ உண்மை என்பதை ஏற்றுக் கொள்கிறார் அருண் ஜேட்லி. இதுபோன்ற அதிரடியான முடிவை எடுக்கும்போது, சில எதிர்விளைவுகளை எதிர்கொண்டாக வேண்டும், பின்னடைவுகளை சந்தித்தாக வேண்டும் என்கிற அவரது வாதத்தை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
செலாவணி செல்லாததாக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் முடிவின் தாக்கம் இந்த நிதிநிலை அறிக்கையில் பளிச்சென்று தெரி
கிறது. இது வெறும் தொடக்கம்தான் என்றால், நிச்சயமாக இந்தியப் பொருளாதாரம் வரப்போகும் ஆண்டுகளில் மிகப் பெரிய மாற்றத்தைக் காணக்கூடும்.
செலாவணி செல்லாததாக்கிய முடிவால் ஏற்பட்ட தாற்காலிகப் பின்னடைவு, அடுத்த நிதியாண்டில் மிகப்பெரிய முன்னேற்றத்திற்கான அடித்தளம் என்று அரசு கருதுவது இந்த நிதிநிலை அறிக்கை சொல்லாமல் சொல்லியிருக்கும் சேதி. அதுமட்டுமல்ல. செலாவணி செல்லாததாக்கும் முடிவால் அரசுக்கு வரி வருவாய் அதிகரிக்கும் என்பதையும், வங்கிகளிடம் சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறைக்கு கடனுதவி வழங்குவதற்குக் கூடுதல் நிதியாதாரம் இருக்கப் போகிறது என்பதையும் நிதிநிலை அறிக்கையின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.
இந்த நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையைப் பல பகுதி
களாகப் பிரித்துத்தான் அலச வேண்டும். இதுவரை தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கைகள் அனைத்தையும்விட இந்த நிதிநிலை அறிக்கை பரந்துபட்ட அளவில் எல்லா பகுதியினர் குறித்தும் சிந்தித்திருக்கிறது. கட்டமைப்பு, கிராமப்புற வளர்ச்சி, தாய்-சேய் நலம், குடியிருப்பு, மின் வசதி, கல்வி, கணினிமயம் என்று அனைத்தையும் ஏதாவது விதத்தில் தனது நிதிநிலை அறிக்கை மூலம் தொட்டிருக்கிறார் நிதியமைச்சர் ஜேட்லி.
இந்த நிதிநிலை அறிக்கை பலத்த கரகோஷத்துடன் பாராட்டுப் பெறுவது நேரடி வரிவிதிப்புக்காகத்தான். ஆண்டொன்றுக்கு
2.5 லட்சம் ரூபாயிலிருந்து ரூ.5 லட்சம் வரை வருமானம் காட்டும் கீழ் நடுத்தர வர்க்கத்தினரின் வருமான வரி விகிதம் 10 சதவீதத்தி
லிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது. அவர்களுக்கு மட்டுமல்ல, வருமான வரி கட்டும் அனைவருக்குமே முதல் 5 லட்சம் ரூபாய் வரையிலான வருவாய்க்கான வரி 5 சதவீதம் குறைகிறது. அதாவது, வரி கட்டும் குடிமக்கள் அனைவருக்குமே ஆண்டொன்றுக்கு அரசு ரூ.12,500 வரிச் சலுகை அளித்திருக்கிறது.
செலாவணி செல்லாததாக்கிய முடிவால்தான் இந்த வரிச் சலுகை சாத்தியமாயிற்று. இதுவரை வரி வரம்பில் சிக்காமல் இருந்தவர்கள், வரி ஏய்த்தவர்கள் அனைவரும் வரி வலைக்குள் வந்திருக்கிறார்கள். அரசுக்கு அதிக வரி வருவாய் கிடைக்க இருப்பதை, பொதுமக்களுக்கும், அரசு பகிர்ந்தளித்திருக்கிறது. செலாவணி செல்லாததாக்கிய முடிவின் நேரடி பலன்களில் இதுவும் ஒன்று.
அதே நேரத்தில் ரூ.50 லட்சத்திற்கும் அதிகமான வருவாய் உள்ளவர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் வரியும், ரூ.1 கோடிக்கும் அதிகமான வருவாய்ப் பிரிவினருக்கு 15 சதவீதம் கூடுதல் வரியும் விதித்து, நியாயமும் செய்திருக்கிறார் நிதியமைச்சர். அதேபோல, ரூ.50 கோடிக்கும் குறைவான பற்றுவரவுள்ள சிறிய, நடுத்தரத் தொழில் நடத்தும் நிறுவனங்களுக்கான வரியை 30 சதவீதத்தி
லிருந்து 25 சதவீதமாகக் குறைத்திருக்கிறது அரசு. இதுவும் செலாவணி செல்லாததாக்கியதன் விளைவால்தான் எனலாம்.
மனை வணிகத் தொழிலில் ஈடுபட்டிருப்போருக்கு, குறிப்பிட்ட அளவுக்கு அதிகமான அளவில் குடியிருப்புகளைக் கட்ட முற்பட்டால், அதன் லாபத்திற்கு 100 சதவீதம் வரி விலக்கு என்று அறிவித்திருக்கிறார் நிதியமைச்சர். 2019-க்குள் 1 கோடி குடியிருப்புகள் கட்டப்பட வேண்டும் என்கிற முனைப்பின் காரணமாகத் தரப்படும் சலுகை இது. இதனால் கட்டுமானத் தொழில் வளர்ச்சி அடைந்து
விடும் என்று தோன்றவில்லை. ஆனால், தேங்கிப் போயிருக்கும் மனைவணிகத்தினருக்கு இந்த வரிச் சலுகை சற்று ஆறுதலாக இருக்கும்.
இந்த நிதிநிலை அறிக்கையிலேயே, மிகவும் புத்திசாலித்தனமான, வரவேற்கத்தக்க முடிவு, விலக்குகள் குறித்த செலவினங்கள் பற்றிய வருமான வரிச் சட்டத்தின் 14-அ பிரிவின் பிரச்னைக்குத் தீர்வு கண்டிருப்பது. தேவையில்லாமல் மேல் முறையீடுகளால் குவிந்து கிடைக்கும் வழக்குகளுக்கு இனிமேல் தேவையிருக்காது. அதேபோல, 234-இ பிரிவையும் அகற்றி இருந்திருந்தால் பாராட்டியிருக்கலாம். அரசுக்கு உதவப்போய் வம்பில் மாட்டிக்கொள்ளும் அந்தச் சட்டப் பிரிவு அபத்தமானது.
- தொடரும்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஏற்றத்துடன் வர்த்தகமாகும் பங்குச்சந்தை! ஐடி, பார்மா பங்குகள் உயர்வு!!

தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை எவ்வளவு?

மார்டல் காம்பட் 2 தமிழ் டிரைலர்!

நல்லகண்ணு மறைவு! தவெக தலைவர் விஜய் அஞ்சலி!
வீடியோக்கள்

#t20wc | இந்தியா அரையிறுதி செல்ல இதெல்லாம் நடக்குமா? | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

எய்ம்ஸ் பணிகளை முடக்கும் திமுக: அண்ணாமலை! | செய்திகள்: சில வரிகளில் | 25.02.26
தினமணி வீடியோ செய்தி...

காதல் ரீசெட் ரிபீட் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...
#t20wc | குரூப் 2-வில் இருந்து அரையிறுதிக்குள் நுழையப்போவது யார்? | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

