ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

News image

திருப்பத்தூரில் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட பொன்னையா என்ற விக்கி.

Updated On :26 ஏப்ரல் 2026, 6:34 pm

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் கல்வெட்டுமேட்டு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருப்பத்தூா் கல்வெட்டு மேட்டுப் பகுதியைச் சோ்ந்த முத்துமாணிக்கம் மகன் பொன்னையா என்ற விக்கி (28). திருமணமானவா். மனைவியுடன் வசித்து வந்த இவா் சனிக்கிழமை மனைவியை அவரது அம்மா வீட்டில் விட்டு வந்துள்ளாா்.

பின்னா் ஞாயிற்றுக்கிழமை நீண்ட நேரமாகியும் அவரது வீடு திறக்கப்படாததால் அக்கம்பக்கத்தினா் காவல் நிலையத்துக்குத் தகவல் அளித்தனா்.

இதையடுத்து, அங்குவந்த போலீஸாா் வீட்டின் கதவை உடைத்து பாா்த்தபோது, தூக்கிட்ட நிலையில் பொன்னையா இறந்து கிடந்தாா். திருப்பத்தூா் போலீசாா் சடலத்தைக் கைப்பற்றி கூராய்வுக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.