கிரிக்கெட் வீரர் என்கிற முறையில் சச்சினின் விடாமுயற்சி, சாதனை புரிய வேண்டும் என்கிற முனைப்பு, அற்புதமான விளையாட்டு ஆகியவற்றிற்காக அவர் பாராட்டப்பட வேண்டியவர் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் அதற்காக, அவருக்கு 1994இல் அவரது கிரிக்கெட் சாதனைகளுக்காக அர்ஜுனா விருது வழங்கப்பட்டபோதும், 1998இல் தலைசிறந்த விளையாட்டு வீரருக்கு வழங்கப்படும் ராஜீவ்காந்தி "கேல் ரத்னா' விருது வழங்கப்பட்டபோதும், 1999இல் பத்மஸ்ரீ விருது தரப்பட்ட போதும், 2008இல் பத்ம விபூஷண் கொடுக்கப்பட்டபோதும், ஏன், அவர் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்ட போதும் கரவொலி எழுப்பி மகிழ்ந்ததுபோல, "பாரத ரத்னா' விருது வழங்கப்பட்டிருக்கும் வேளையில் பாராட்டி மகிழ மனம் ஒப்பவில்லை.