அறுவைச் சிகிச்சை, கதிர்வீச்சு அறுவைச் சிகிச்சை, கீமோதெரபி சிகிச்சை ஆகிய முக்கியமான சிகிச்சைகள் அனைத்தும் இம்மையத்தில் செய்யப்படுகிறது. இவை தவிர துணைப் பரிசோதனைகளான சதைப் பரிசோதனை, கதிர் ஊடுருவியல் துறை, பல் சார்ந்த புற்றுநோய் மருத்துவம், பெண்களுக்கு ஏற்படக்கூடிய புற்றுநோய் தொடர்பான பரிசோதனைகள் குறித்த சிறப்புப் பிரிவு, ரத்த பரிசோதனை, எக்ஸ்ரே, இ.சி.ஜி., மிக நவீனமான சி.டி. ஸ்கேன் கருவி ஆகிய அனைத்து வசதிகளும் இம்மருத்துவமனையில் உள்ளன.
கோபால்ட் கதிர்வீச்சு இயந்திரம் என்ற கருவி கடந்த 1969 ஆம் ஆண்டு முதல் நிறுவப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. பக்க விளைவுகள் இல்லாததும், நோயாளிகளுக்கான சிகிச்சை நேரம் குறையக்கூடிய வகையில் பயன்படக்கூடிய பல கோடிகள் மதிப்பிலான மிக நவீன கதிர்வீச்சு இயந்திரமும் இம்மருத்துவமனையில் செயல்பாட்டில் இருப்பது தனிச் சிறப்பாகும்.