'உங்களை ஸ்ரீதேவி மறைவுக்காக அப்படியே சோகத்தில் மூழ்கி இருங்கள் என்று கூறவில்லை, ஆனால், இந்தியாவின் மிகப் பிரபலமான சூப்பர் ஸ்டார் நடிகையாக இருந்தவர் இறந்திருக்கிறார். அவரது இறப்பிற்காக குறைந்த பட்சம் 13 நாட்களாவது துக்கம் அனுஷ்டிக்கக் கூடாதா? இறப்பில் நாங்கள் துயரப்படுகிறோம் என உருக்கமாகக் கடிதம் எழுதி விட்டு இப்போது சகோதரிகளுடன் சோகத்தின் சுவடே இன்றி கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடி அதை வலையிலும் ஏற்ற வேண்டுமா? உங்களுக்கே தெரியும், உங்களது குடும்பம் ஸ்ரீதேவி மறைவின் பின் தொடர் கண்காணிப்பில் இருக்கிறது என; வலையுலகில் மக்கள் உங்களைத் தான் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள். வெறும் வாய்க்கு அவல் கிடைத்தாற் போல நீங்களாக ஏன் இப்படி கொண்டாட்டமான புகைப்படங்களை வலையேற்றிக் கொண்டிருக்கிறீர்கள்.’