தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி காலமான சமயத்தில் நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் சென்னையில் இல்லை. அவர் சிகிச்சைக்காக அமெரிக்காவில் இருந்தார். நேற்று சிகிச்சை முடிவுற்று அவர் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பியதை அடுத்து உடனடியாக மெரினாவில் இருக்கும் கலைஞர் நினைவிடம் சென்று அவருக்குத் தனது அஞ்சலியை செலுத்த விரும்பினார். அதன்படி நேற்று தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் சகிதம் கலைஞர் நினைவிடத்துக்கு வருகை தந்து மலர் தூவி கலைஞருக்கு அஞ்சலி செலுத்தினார். இந்தச் செய்தி அனைத்து ஊடகங்களிலும் வெளியாகி இருந்தது.