வந்தவனின் நோக்கம் திருட்டு அல்ல, பூஜாவின் கணவர் அரசியல் வாதி என்பதால், இது ஏதோ உள்நோக்கத்திற்காக நடந்த சம்பவம் தான். இதற்கு முன்பும் பிரேந்திர நாத்துக்கு தனிப்பட்ட முறையில் சில தாக்குதல்கள் நிகழ்ந்திருந்தாலும் இப்படி குடும்பத்தினருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் அந்த தாக்குதல்கள் இருந்திருக்கவில்லை. ஆனாலும், எதற்கும் பாதுகாப்புக்கு இருக்கட்டும் என்ற எண்ணத்தில் தான் வீட்டில் கதவு மூலையில் எப்போதும் ஹாக்கி ஸ்டிக்குகளை சாற்றி வைப்பதை வழக்கமாக வைத்திருந்தனர். அந்த ஹாக்கி ஸ்டிக்கும், பூஜாவின் தைரியமும், சம்யோசிதமும் தான் அவரை அன்று மிகப்பெரிய ஆபத்திலிருந்து காப்பாற்றியிருந்தது. இல்லாவிட்டால், அன்று அவர்களது வீட்டில் உயிர்ப்பலி நிகழவும் வாய்ப்புகள் இருந்ததாக பூஜாவின் கணவன் பிரேந்திர நாத் பின்னர் காவல்துறையினரிடம் தெரிவித்தார்.