டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

கவிஞர் ரவி சுப்பிரமணியத்திற்கு தி.க.சி  இயற்றமிழ் விருது-2017

எங்கெங்கு கலை உணர்வு துளிர்த்ததோ, அங்கெல்லாம் நீர் வார்த்து மலரச் செய்தவர்

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:12 pm

உமா ஷக்தி.

எங்கெங்கு கலை உணர்வு துளிர்த்ததோ, அங்கெல்லாம் நீர் வார்த்து மலரச் செய்தவர், தமிழ் இலக்கிய நந்தவனத்தின் தோட்டக்காரர் தி.க.சி. அவரால் திரி நனைத்து சுடர் ஏற்றப்பட்ட எத்தனையோ கலை, இலக்கிய தீப ஸ்தம்பங்கள் இன்றும் சுடர் வீசிக் கொண்டிருக்கின்றன. சமூக, அரசியல் பண்பாட்டுத் தளத்தில் ஒங்கி ஒலித்துக் கொண்டிருந்த அந்த உரத்த குரலோன் தி.க.சி.யினால் உத்வேகம் பெற்ற அன்பர்களால் கடந்த 2016ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டுள்ள அமைப்பு 'நந்தா விளக்கு'.

இவ்வமைப்பின் சார்பாக, அவரது நினைவைப் போற்றும் வகையில், 'தி.க.சி இயற்றமிழ் விருது' வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2016ஆம் ஆண்டுக்கான விருது, நாடகக் கலைஞரும், திரைப்பட நடிகரும், முதுபெரும் எழுத்தாளருமான திரு.பாரதி மணி அவர்களுக்கு வழங்கப்பட்டது. 'புள்ளிகள் கோடுகள் கோலங்கள்' நூலுக்காக இவ்விருதினை அவர் பெற்றார். இவ்விருது விழாவினைத் தொடர்ந்து, கடந்த 27-08-2016 அன்று திருநெல்வேலியில் மூத்த இலக்கியப் படைப்பாளிகளைக் கொண்டாடும் நிகழ்வினை ‘நந்தா விளக்கு’ கொண்டாடியது. இந்நிகழ்வில், எழுத்தாளர் வாத்தியார் ஜேக்கப், மானுடவியலாளர் தொ.பரமசிவன், வரலாற்று ஆய்வாளர் செ.திவான் உள்ளிட்ட மூத்த படைப்பாளிகள் கெளரவப்படுத்தப்பட்டனர்.

அந்த வரிசையிலே, ‘தி.க.சி இயற்றமிழ் விருது - 2017’ஆம் ஆண்டு விருதுக்கு, கவிஞரும், எழுத்தாளரும், ஆவணப்பட தயாரிப்பாளரும், இயக்குநருமான திரு.ரவி சுப்பிரமணியன் அவர்களை ‘நந்தா விளக்கு’ தேர்ந்தெடுத்துள்ளது. கலை, இலக்கியத்திற்கு அவர் ஆற்றிவருகின்ற நெடுங்கால பணியை போற்றும் விதமாகவும், அவரது ‘ஆளுமைகள் தருணங்கள்’ நூலுக்காகவும் இவ்விருது அவருக்கு வழங்கப்படவுள்ளது.

வரும் 15-04-2017 சனிக்கிழமை அன்று மாலை 05.30 மணிக்கு, திருநெல்வேலி, ஹோட்டல் ஜானகிராம் - அயோத்தியா ஹாலில் நடைபெறும் விழாவில் இவ்விருது அவருக்கு வழங்கப்படும். இந்தத் தகவலை பகிர்ந்து கொண்டவர் நந்தா விளக்கு அமைப்பாளர் தி.சுபாஷிணி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.